டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பச்சை மண்டலங்கள் இடையே மட்டுமே இயக்க விமான நிறுவனங்கள் மறுப்பு.. விமான சேவை எப்போது தொடங்கும்?

Google Oneindia Tamil News

டெல்லி: மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு உள்பட நாட்டின் முக்கிய மெட்ரோ சிவப்பு மண்டலத்தில் சிக்கி உள்ள நிலையில் பச்சை மண்டலத்தில் உள்ள நகரங்களுக்கு இடையில் மட்டும் விமானங்களை இயக்கலாம் என்ற ஐடியாவிற்கு விமான நிறுவனங்கள எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நாட்டில் விமானம், ரயில் சேவை, பொதுபோக்குவரத்து கடந்த மார்ச் 25 தேதி முதல் முடங்கி உள்ளது. விமான சேவை உள் நாட்டிற்கு இடையிலும், வெளிநாடுகளுக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவ சேவைக்காக மட்டும் அவசர தேவைக்காக விமான சேவைகள் செயல்படுகின்றன.

உள்நாட்டு விமான போக்குவரத்தில் நாட்டில் உள்ள முதல் ஆறு மெட்ரோ விமான நிலையங்களில் தான் சுமார் 65 சதவீதம் போக்குவரத்து நடைபெறுகிறது. கோவிட் -19 தொற்று எண்ணிக்கை மற்றும் நோயின் இரட்டிப்பு வீதத்தின் அடிப்படையில் மத்திய சுகாதார அமைச்சகம் இந்தியா முழுவதும் 733 மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாக பிரித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா.. வெறும் 12 நாளில் 3000 பேருக்கு பரவியது எப்படி சென்னையில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா.. வெறும் 12 நாளில் 3000 பேருக்கு பரவியது எப்படி

டெல்லி மும்பை சென்னை

டெல்லி மும்பை சென்னை

இந்த பட்டியல் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களை மே 4 க்கு அப்பால் இரண்டு வாரங்கள் நீட்டித்ததால் ‘எந்த நடவடிக்கையும் இல்லை' மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில், விமானங்களை படிப்படியாக மறுதொடக்கம் செய்வதை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறினார். "நாங்கள் விமானத் துறையை படிப்படியாகவும் அளவீடு செய்யப்பட்ட முறையிலும் திறக்க வேண்டும். இரண்டு பசுமை மண்டலங்களுக்கு இடையிலான விமானங்களுக்கு மட்டுமே நாங்கள் திட்டமிட முடியும். சிவப்பு மண்டலங்களுக்கு இடையில் சேவைகளை மீண்டும் தொடங்குவது கடினம் என்று பூரி கூறினார்.

சாத்தியமில்லை

சாத்தியமில்லை

இந்நிலையில் விமான சேவைகளை பச்சை மண்டலத்தில் உள்ள நகரங்களுக்கு இடையில் மட்டுமாவது ஆரம்பத்தில் செயல்படுத்தலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. இதற்கு விமான நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது சாத்தியமில்லை, இயக்க முடியாது என்று மறுத்துள்ளன. சிவில் விமான அமைச்சக செயலாளர் பிரதீப் சிங் கரோலா தலைமையில் ஒரு குழு சனிக்கிழமை கூடி விமானப் பயணத்தை மீண்டும் தொடங்குவது குறித்து விவாதித்தது, அங்கு விமான நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் அதிகாரிகளுக்கும் இடையே விமான போக்குவரத்தை எப்படி துவங்குவது என்பதில் மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தினர்.

பச்சை மண்டலங்கள்

பச்சை மண்டலங்கள்

இந்த கூட்டத்தில் ஒரு விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பச்சை மண்டலங்கள் இடையில் விமான போக்குவரத்த துவங்க எதிர்ப்பு தெரிவித்தார். "குறைந்தது மூன்று பெரிய விமான நிலையங்கள் செயல்படாமல் இந்திய விமான போக்குவரத்து மீண்டும் தொடங்க முடியாது. டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் பெரிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் மற்ற இடங்களில் இயக்க அரசாங்கமே அனுமதித்தாலும் விமானங்கள் பறப்பதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என்றார்.

தெலுங்கானா நீட்டிப்பு

தெலுங்கானா நீட்டிப்பு

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசு ஒப்புக் கொண்டால் மட்டுமே சிவப்பு மண்டலங்களுக்கு இடையில் விமான போக்குவரத்தை மறுதொடக்கம் செய்ய முடியும் என்று மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். தெலுங்கானா அரசாங்கம் ஏற்கனவே மூன்றாம் கட்ட பூட்டுதலை மே 29 வரை நீட்டித்துள்ளது. மார்ச் 22 அன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி விமான நிலையத்தை மூடுவதாக அறிவித்ததைப் போல மீண்டும் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்க மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. ஏனெனில் விமான போக்குவரத்து விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு அனுமதித்தது.

விமான சேவை எப்போது

விமான சேவை எப்போது

"பொருளாதார நடவடிக்கைகளை மறுதொடக்கம் செய்ய நாங்கள் ஆர்வமாக உள்ளோம், அவற்றில் விமான போக்குவரத்து ஒரு முக்கிய அங்கமாகும். ஆனால் மத்திய அரசு தனிமையில் ஒரு முடிவை எடுக்க முடியாது, ஏனெனில் மாநில அரசுகள் அவற்றின் சூழலை தீர்மானிக்க மிகவும் பொருத்தமானவை, "என்று ஒரு அதிகாரி கூறினார். மார்ச் 24 வரை தரையிறங்கிய விமானங்களில் 90 சதவீதம் மேல் விமான நிலையங்களில் தேங்கி கிடக்கின்றன. டெல்லி விமான நிலையத்தில் சுமார் 180 விமானங்கள் உள்ளன. மும்பை விமான நிலையத்தில் 80 விமானங்கள் உள்ளன. மீதமுள்ளவை மற்ற பெருநகரங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. "ஓரளவு மறுதொடக்கம் செய்ய கூட, டெல்லி அல்லது மும்பை விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவையை ஆரம்பிக்க வேண்டும், இது இல்லாமல் விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்குவது பற்றி பேசுவது நடைமுறைக்கு ஒத்துவராது" என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

English summary
Airlines say flights between green zones unviable, Indian aviation cannot resume without at least three major airports being functional.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X