“முதல்வர் பேச்சு பிரிவினைவாத மனநிலை எண்ணமாக உள்ளது!” - நிர்மலா சீதாராமன் சாடல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், தமிழ்நாட்டிற்கு அதிவேக ரயில் திட்டத்தை தவிர பிரதானமாக பெரிய திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் தலைவர்கள் விமர்சித்திருந்தனர். இந்நிலையில், முதல்வர் பேச்சு பிரிவினைவாத மனநிலை எண்ணமாக உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாடியிருக்கிறார்.

நியூஸ் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு, நிர்மலா சீதாராமன் பிரத்யேக பேட்டியளித்திருந்தார். அதில் இவ்வாறு அவர் கூறியிருந்தார். அவரது கருத்துக்கள் கடும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

FM Nirmala Sitharaman

முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது என்ன?

"ஹிந்தி திணிப்பை எதிர்த்து, உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் நினைவை போற்றும் வகையில், திமுக சார்பில் காஞ்சிபுரத்தில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

தேசியக் கல்வி கொள்கை மற்றும் மும்மொழி திட்டம் என்ற பெயரில் ஒரு கும்பல் இந்திய திணிக்க துடிக்கிறது. இது வெறும் மொழி திணிப்பல்ல, ஒரு இனத்தின் மீதான பண்பாட்டு படை எடுப்பு. பல்கலைக்கழகங்கள் வாயிலாக மறைமுகமாக மத்திய அரசு இந்தியை திணிக்க பார்க்கிறது. பணத்திற்கும் அதிகாரத்திற்கும் அஞ்சி பணிய தமிழ்நாட்டின் திமுக தொண்டர்கள் அடிமைகள் அல்ல.

பிரிவினை எண்ணம்

வட மாநில மக்களை ஏமாற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் பாஜகவின் டபுள் எஞ்சின் அரசு, தமிழ்நாட்டில் ஒருபோதும் ஓடாது. 2026 சட்டமன்ற தேர்தல் என்பது ஆரியத்துக்கும், திராவிடத்திற்கும் இடையிலான போர் என்று பேசியிருந்தார். இது குறித்து பதிலளித்த நிர்மலா சீதாராமன், முதல்வர் பேச்சு பிரிவினைவாத மனநிலை எண்ணமாக உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்கள்

நிர்மலா சீதாராமன் பேசுகையில், இது திமுகவின் நீண்டகால போக்கு என்றும், தமிழ்நாட்டை இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்ட முயற்சிப்பது என்றும் கூறினார். தமிழ்நாட்டு மக்கள் அப்படியல்ல, ஆனால் தற்போதைய தலைமை இந்த பிளவு விளையாட்டை விளையாடுகிறது என்று குறிப்பிட்டார்.

அதிவேக ரயில்கள்

ஆரிய-திராவிட போராட்டமாக ஸ்டாலின் சித்தரிப்பதை புதியதல்ல என்று சுட்டிக்காட்டினார். பட்ஜெட் குறித்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கு இது வருத்தமான கருத்து என்று கூறினார். பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு பல நன்மைகள் உள்ளன என்று விளக்கினார். அதிவேக ரயில்கள் சென்னை-ஹைதராபாத், சென்னை-பெங்களூரு திட்டங்கள் தமிழ்நாட்டுக்கானவை என்று கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+