வரலாற்றில் முதல்முறை.. இந்த தேர்வையும் இனி தமிழிலேயே எழுதலாம்.. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு
டெல்லி: சி.ஆர்.பி.எப். தேர்வைத் தொடர்ந்து எஸ்.எஸ்.சி. தேர்வும் தமிழில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்வு வரலாற்றில் முதல்முறையாக எஸ்.எஸ்.சி. தேர்வு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
வருகிற மே 2ம் தேதி எஸ்.எஸ்.சி. எம்டிஎஸ் தேர்வு தொடங்க உள்ள நிலையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சிஆர்பிஎப் தேர்வை தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இந்நிலையில் மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் எம்.டி.எஸ்.(MTS- Multi Tasking Staff) மற்றும் சிஹெச்எஸ்எல் (CHSL - Combined Higher Secondary Level Exam) ஆகிய தேர்வுகளை தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
இதன் மூலம் மத்திய அரசு ஆண்டு தோறும் நிரப்பும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளுக்கு தமிழர்களும் தங்களது தாய் மொழியான தமிழில் தேர்வு எழுத முடியும்.
முன்னதாக எம்.டி.எஸ்.(MTS- Multi Tasking Staff) மற்றும் சிஹெச்எஸ்எல் (CHSL - Combined Higher Secondary Level Exam) ஆகிய தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது.

ஆனால் தேர்வு வரலாற்றில் முதல்முறையாக இனி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒடிசா, அசாமி, பெங்காலி, குஜராத்தி, உருது, பஞ்சாபி, மணிப்புரி, கொங்கணி என 13 மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
எஸ்.எஸ்.சி. எம்டிஎஸ் தேர்வு வருகிற மே 2 ஆம் தேதி தொடங்கவுள்ளது. எம்.டி.எஸ்.(MTS- Multi Tasking Staff) பணியில் 10880 இடங்களும் மற்றும் சிஹெச்எஸ்எல் (CHSL - Combined Higher Secondary Level Exam) பணியில் 529 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications