முப்படைகளின் தலைமை தளபதியை மத்திய அரசுதான் முடிவு செய்யும்- முன்னாள் ராணுவ தளபதி சங்கர் ராய்
டெல்லி: முப்படைகளின் புதிய தலைமை தளபதி சீனியாரிட்டி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார் என்பதைவிட மத்திய அரசுதான் இறுதி முடிவெடுக்கும் என்று முன்னாள் ராணுவ தளபதி சங்கர் ராய் செளத்ரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். பிபின் ராவத் உள்ளிட்டோர் உடல்கள் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளன.
இதனிடையே புதிய முப்படைகளின் தலைமை தளபதி யார் என்கிற விவாதம் நடைபெற்று வருகிறது. தற்போதைய ராணுவ தளபதி நரவனே, ஓய்வு பெற்ற விமான படை தளபதி பதவுரியா ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்கிற கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு நியமனம்
இந்நிலையில் புதிய முப்படைகளின் தலைமை தளபதி யார் என்பது குறித்து இந்தியா டுடே டிவிக்கு ஓய்வு பெற்ற ராணுவ தளபதி சங்கர் ராய் செளத்ரி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: பிபின் ராவத் மத்திய அரசால் நேரடியாக நியமிக்கப்பட்டவர். முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட போது அவர்தான் அனைவருக்கும் சீனியர் என்ற நிலையில் இல்லை.

வழிகாட்டுதல்களில் தெளிவு இல்லை
முப்படைகளின் தலைமை தளபதி நியமனம் தொடர்பான விதிகளில் தெளிவாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பிபின் ராவத்துக்கு அனுபவம் அதிகம் இருந்தது. இதுபோன்ற காரணங்களால் அப்பதவிக்கு அவரை மத்திய அரசு நியமித்தது.

இறுதி முடிவு மத்திய அரசு கையில்
முப்படைகளின் தலைமை தளபதியின் நியமனம் தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்கள் இப்போதாவது தெளிவுபடுத்தப்பட வேண்டும். புதிய முப்படைகளின் தலைமை தளபதி ராணுவத்தைச் சேர்ந்தவரா? விமானப் படையை சேர்ந்தவரா? கடற்படையைச் சேர்ந்தவரா? என்பதில் தெளிவு எதுவும் இல்லை. சீனியாரிட்டி என்பதைவிட மத்திய அரசுதான் இதில் இறுதி முடிவு எடுக்கும். இவ்வாறு சங்கர் ராய் செளத்ரி கூறியுள்ளார்.
Recommended Video

ஓய்வு பெறுவதற்கு முதல்நாளில் நியமனம்
நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதியாக 2019-ம் ஆண்டு பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு முதல் ராணுவ தளபதியாக பணியாற்றிய பிபின் ராவத் 2019-ல் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் முப்படைகளின் தலைமை தளபதியாக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். முன்னதாக 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தின நாளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, முப்படைகளின் தலைமை தளபதி நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications