டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெரிதாக வெடிக்கும் பெகாசஸ் விவகாரம்.. சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா செல்போனும் ஒட்டு கேட்பு

Google Oneindia Tamil News

டெல்லி: சிபிஐ அமைப்பின் முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா, தொழிலதிபர் அனில் அம்பானி ஆகியோரது தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இஸ்ரேலை சேர்ந்த நிறுவனத்தின் பெகாசஸ் உளவு சாப்ட்வேர் மூலமாக உலகின் பல்வேறு தலைவர்களும் உளவு பார்க்கப்பட்டதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

Former CBI director Alok Verma and businessman Anil Ambani spied with Pegasus

இந்தியாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, 2 மத்திய அமைச்சர்கள், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஆகியோரது செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் புதிதாக வெளியாகியிருக்கும் செய்தியில், சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனராக பதவி வகித்த ராஜேஷ் அஸ்தானா ஆகியோரது செல்போன்கள் ஓட்டு கேட்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

பெகாசஸ் உளவு.. நாட்டிலேயே முதலாவதாக விசாரணைக்கு உத்தரவிட்ட சட்டீஸ்கர் அரசுபெகாசஸ் உளவு.. நாட்டிலேயே முதலாவதாக விசாரணைக்கு உத்தரவிட்ட சட்டீஸ்கர் அரசு

நாட்டின் மிகப்பெரிய விசாரணை அமைப்பு சிபிஐ. அந்த அமைப்பின் தலைவர் செல்போன் ஒட்டு கேட்கப்பட்டு இருப்பது நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் சமரசம் செய்து கொள்வதற்கு ஈடானது என்பதால் இது பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கையாக இருக்கிறது.

அலோக் வர்மா மட்டும் கிடையாது அவரது மனைவி, மகள், மருமகன் ஆகியோரது செல்போன்களும் உளவு பார்க்கப்பட்டு இருக்கிறது. அலோக் வர்மா 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    Pegasus Spyware மூலம் உளவு பார்க்கப்பட்டதா? Central Govt விளக்கம் | Oneindia Tamil

    அலோக் வர்மா மற்றும் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டது. நாட்டிலேயே முதல் முறையாக, சிபிஐ அலுவலகத்திலேயே சிபிஐ சோதனை நடத்தியது. தற்போது அஸ்தானா எல்லை பாதுகாப்பு படை தலைவராக பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    It has been reported that the phones of former CBI director Alok Verma and former CBI special director Rakesh Asthana and businessman Anil Ambani have been spied on.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X