நீங்கள் வெளியேறும் நேரம் வந்துவிட்டது.. காஷ்மீர் தலைவர்களுக்கு செக்.. மத்திய அரசு ஷாக்கிங் திட்டம்
காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுக
Recommended Video
டெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
பொதுவாக அரசியல்வாதிகள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் போனால் அவர்களால் அரசு கட்டிடத்தில், வீட்டில் வசிக்க முடியாது. உத்தர பிரதேசத்தில் உள்ள அரசியல்வாதிகள் இது போல பதவியில் இல்லாத போது கூட, அரசு கட்டிடத்தில் வசித்து வந்தனர்.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து, முன்னாள் முதல்வர்கள் அரசின் பங்களாவில் வசிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தற்போது மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் அரசு வீட்டில் வசிக்காமல் தங்கள் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள்.

ஆனால் என்ன
ஆனால் காஷ்மீருக்கு இந்த சட்டம் முன்பு பொருந்தவில்லை. அப்போது காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் இருந்ததால், இந்த உச்ச நீதிமன்ற உத்தரவு அந்த மாநிலத்திற்கு பொருந்தவில்லை. இந்த நிலையில் காஷ்மீரை சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் ஆட்சியில் இல்லை என்றாலும் இப்போதும் கூட அரசின் சொகுசு பங்களாவில்தான் வசித்து வருகிறார்கள்.

அரசு பணம்
இந்த வீடுகளில் வசிப்பதற்காக மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் அரசு பணத்தை பல கோடிகளில் செலவு செய்து இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இந்த வீட்டை புதுப்பிக்க 10 - 15 கோடிகளை செலவழித்து இருக்கிறார்கள். பரூக் அப்துல்லா மட்டும் சுமார் 50 கோடி ரூபாயை செலவழித்து இருக்கிறார்.

எவ்வளவு
அதேபோல் மெகபூபா முப்தி தன்னுடைய அரசு பங்களாவை புதுப்பிக்க 25 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருக்கிறார்கள். இதெல்லாம் முழுக்க முழுக்க அரசின் பணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடுகள் எல்லாம் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் எப்படி கேட்கிறார்களோ அப்படி வடிவமைத்து தரப்பட்டு உள்ளது.

என்ன முறைகேடு
அதேபோல் இந்த வீடுகளுக்காக நிலங்கள் சில முறைகேடாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், சாலை, தண்ணீர் வசதிகள் இலவசமாக செய்து கொடுக்கப்பட்டு நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது. ஆட்சியில் இருந்து போதும், இல்லாத போதும் இந்த வசதிகளை இவர்கள் சந்தோசமாக அனுபவித்து வந்து இருக்கிறார்கள்.

இனி இல்லை
ஆனால் தற்போது காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் உத்தர பிரதேச வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தற்போது காஷ்மீருக்கு பொருந்தும். இதனால் காஷ்மீரில் அரசு பங்களாவில் பல வருடங்களாக வசித்து வரும் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் தங்கள் சொந்த வீட்டிற்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அதிரடி
இன்னும் சில நாட்களில் காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலை இயல்பு நிலைக்கு திரும்பிய உடன், அங்கு இருக்கு முன்னாள் முதல்வர்களின் அரசு பங்களாக்கள் உடனே பிடுங்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இது காஷ்மீர் அரசியலில் புதிய திருப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications