நிதிஷ்.. பாபுவுக்கு அழைப்பா? நாளை எடுக்கப் போகும் முக்கிய முடிவு! ராகுல் பேச்சால் பதற்றத்தில் பாஜக?
டெல்லி: இப்போது பாஜக கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சிகளை அழைத்து பேசுவது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைமையை மறைமுகமாக விமர்சித்துள்ளார் பிரபல யூட்யூபரும், பாஜக ஆதரவாளருமான மாரிதாஸ்.

இந்தியாவின் 18வது மக்களவைக்கான 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவைத் தேர்தல் ஆனது நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
400 மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என பிரதமர் நரேந்திர மோடியும் அந்த கட்சியின் முக்கிய தலைவருமான அமித்சாவும் சூளுரைத்தனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. 290க்கும் மேற்பட்ட தொகுதிகளிலேயே பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. கடும் போட்டி அளித்து வரும் இந்தியா கூட்டணி 220க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் கூட்டணி கட்சிகளின் தயவிலேயே ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் பாஜகவின் தோல்வி குறித்தும் காங்கிரசின் வெற்றி குறித்தும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது பேசிய ராகுல்," அரசியல் சாசனத்தை காக்க இந்த தேர்தலை நாங்கள் பார்த்தோம். அரசியல் சாசனத்தை காக்க மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. மக்கள் தீர்ப்பு அரசியல் சாசனத்தை காக்க உதவி இருக்கிறது.
இந்த தோல்வியின் மூலம் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. ஊழல் கூட்டணி வைத்திருந்தவர்களுக்கு இந்த தேர்தல் தக்க பாடம் புகட்டி இருக்கிறது இந்தியா கூட்டணி தனித்த வெற்றியை பெறவில்லை என்றாலும் மக்களின் உரிமைகளை காக்க போராடும் வகையில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்திய கூட்டணி ஆட்சி அமைப்பீர்களா என கேட்கிறார்கள். அதற்கான முடிவு நாளை எடுக்கப்படும்.
இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை நாளை நடைபெற இருக்கும் நிலையில் அதற்குப் பிறகு இது குறித்து அறிவிக்கப்படும். மேலும் ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா என கேட்கிறார்கள். அது குறித்து நாளை முடிவு செய்யப்படும். ரேபெரலி வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து இருக்கிறார்கள். அவர்களை நம்பிக்கையை காப்பாற்றுவேன். அதே நேரத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உள்ளதால் அது எந்த தொகுதி என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன்" என்றார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications