புல்வாமா சர்ச்சையை கிளப்பிய சத்யாபால் மாலிக்! இன்சூரன்ஸ் வழக்கில் சம்மன் அனுப்பியது சிபிஐ! என்னாச்சு
டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக்கை சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது. அவர் அடுத்த வாரம் சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராக உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநராக இருந்தவர் சத்ய பால் மாலிக். இவர் அவ்வப்போது பிரதமர் மோடி குறித்தும் விமர்சிக்கும் வகையிலான கருத்துகளைக் கூறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் கூட பிரதமர் மோடிக்கு ஊழலுக்கு ஏதராக முழு வெறுப்பு எல்லாம் இல்லை என்றும் கோவாவில் தான் ஆளுநராக இருந்த போது, ஊழல் குறித்துச் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது போலக் கூறியிருந்தார். மேலும், புல்வாமா தாக்குதல் தொடர்பாகவும் சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்தார்.
சிபிஐ சம்மன்: இதனிடையே சத்ய பால் மாலிக்கை சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது. ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவன ஒப்பந்தத்தில் ஊழல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக்கை, ஏப்ரல் 28-ஆம் தேதி சாட்சியாக விசாரிக்க சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

இதை சத்ய பால் மாலிக்கே பிடிஐ ஊடகத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார். சில விஷயங்களைத் தெளிவுபடுத்த சிபிஐ தன்னை நேரில் ஆஜராகக் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "நான் எப்போது ஃப்ரீயாக இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ள விரும்பினர். நான் ராஜஸ்தானுக்குச் செல்கிறேன் என்பதால் ஏப்ரல் 27 முதல் 29 வரை வருவதாக அவர்களிடம் சொல்லி இருக்கிறேன்" என்றார்.
என்ன விஷயம்: மாலிக் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தபோது, தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனத்தின் ஒப்பந்தத்தை 2018இல் ரத்து செய்தார். ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்ததில் மோசடி நடந்துள்ளதாகக் கூறி, ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் டிரினிட்டி ரீஇன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காப்பீட்டுத் திட்டத்தில் மோசடி நடந்துள்ளதாக மாலிக் கூறியதை அடுத்து, இதை சிபிஐ அமைப்பு விசாரித்தது. சுமார் 3.5 லட்சம் ஊழியர்களைக் கொண்ட இந்தத் திட்டம், செப்டம்பர் 2018இல் அமலுக்கு வந்தது. இருப்பினும் ஒரே மாதத்தில் மாலிக் இதை ரத்து செய்தார்.
என்ன சொன்னார்: இதில் மோசடி நடந்துள்ளதாகவும் இதன் காரணமாகவே ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், அவர் "நானே இந்த கோப்புகளை ஆய்வு செய்தேன்.. ஒப்பந்தம் தவறாக இருந்தது. இதை ரத்து செய்ய வேண்டும் என்பதே மாநில அரசு ஊழியர்களின் விருப்பம். கோப்புகளைப் படித்த போது, எனக்கும் அப்படியே தோன்றியது. இதன் காரணமாகவே காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்துள்ளேன்" என்று கூறியிருந்தார்.
சிபிஐ கடந்த ஆண்டு செப்டம்பரில் மாலிக்கிடம் இந்த இன்சூரன்ஸ் குற்றச்சாட்டுகள் குறித்தும் கிரு நீர் மின் திட்டத்தில் குடிமராமத்து பணிக்கான ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் மற்றொரு வழக்கு குறித்தும் கூடுதல் தகவல்களைப் பெற்றது. இந்தச் சூழலில் தான் அவரை மீண்டும் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி வலியுறுத்தியுள்ளனர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications