ராஜ்யசபாவில் காவிரி பிரச்சனையை கிளப்பிய தேவகவுடா-கடும் எதிர்ப்பை தெரிவித்த திமுக எம்பி திருச்சி சிவா
டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் ராஜ்யசபாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா காவிரி பிரச்சனையை முன்வைத்து பேசினார். இதற்கு தமிழ்நாட்டின் திமுக எம்.பி. திருச்சி சிவா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. மொத்தம் 5 நாட்கள் இந்த கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத் தொடரில் ராஜ்யசபாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா தள்ளாத முதுமையிலும் அமர்ந்த நிலையில் பேசியதாவது: காவிரி நதிநீர் பிரச்சனைக்கு சட்டப்பூர்வமாக தீர்வு காண முடியாது. கர்நாடகா,தமிழ்நாடு அரசுகள் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும். கர்நாடகாவில் கடுமையான வறட்சி நிலவுகிறது. கர்நாடகா மாநிலம் கோவா, தெலுங்கானா, தமிழ்நாடு மாநிலங்களுடன் நதிநீர் பகிர்வு மேற்கொண்டுள்ளது.
கர்நாடகா, தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களின் எம்.பிக்களைக் கொண்ட 5 பேர் குழுவை கர்நாடகாவுக்கு அனுப்ப வேண்டும். கர்நாடகாவின் நதிநீர் நிலவரம் என்ன என்பதை இந்த ராஜ்யசபாவுக்கு தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் இந்த ராஜ்யசபா என்ன முடிவெடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்.
#WATCH | On Cauvery water sharing issue, former PM and JD(S) MP HD Devegowda in Rajya Sabha says,"...We should all sit together and try to resolve this problem...Legal battle will not solve this problem..." pic.twitter.com/wJnNzPA9tu
— ANI (@ANI) September 18, 2023
தற்போது எனக்கு 91 வயதாகிறது. கடந்த 60 ஆண்டுகளாக காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறேன். நான் இன்னமும் எத்தனை காலம் உயிருடன் இருப்பேன் என தெரியாது. என் வாழ்நாள்{ முடிவதற்குள் காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இவ்வாறு தேவகவுடா பேசினார். முன்னாள் பிரதமர் தேவகவுடா பேச்சுக்கு திமுக எம்.பி. திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications