ஆர்எஸ்எஸ் விழாவுக்கு தலைமை தாங்கும் ராம்நாத் கோவிந்த்.. இதுக்கு பின்னாடி இவ்வளவு அரசியலா?
டெல்லி: ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்த விஜயதசமி நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்வு நாக்பூரில் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் பலே திட்டம் வெளியாகி பேசு பொருளாகியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம்நாத் கோவிந்த். இவர் வழக்கறிஞராகவும், பாஜக நிர்வாகியுமாக இருந்தார். இந்திய நாட்டின் முன்னாள் குடியரசு தலைவராக (2017-2022) இருந்தவர் ராம்நாத் கோவிந்த். நாட்டின் பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்த பெருமையை பெற்றவர் ராம்நாத் கோவிந்த்.

ஆர்எஸ்எஸ் விஜயதசமி நிகழ்ச்சி
இந்நிலையில் தங்களின் முக்கிய நிகழ்ச்சி ஒன்றுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு ராம்நாத் கோவிந்தை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 100 வருடங்களாகிவிட்டன. இதையடுத்து அந்த அமைப்பு நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது. பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஆர்எஸ்எஸ் அமைப்பு விஜயதசமி பண்டிகையை பிரம்மாண்டமாக கொண்டாடும்.
அந்தக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவருடன், ஒரு முக்கிய பிரமுகரை சிறப்பு விருந்தினராக அழைக்கும். கடந்த காலங்களில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதனால் விஜய தசமி நிகழ்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் யாரை சிறப்பு விருந்தினராக அழைக்கிறது என்பது அரசியல் களத்தில் கவனிக்கப்படும்.
சிறப்பு விருந்தினராக ராம்நாத் கோவிந்த்
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் இயக்கம் தங்களின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாக்பூரில் அக்டோபர் 2 ஆம் தேதி காலை 7.40 மணியளவில் ஆர்எஸ்எஸ் விஜயதசமி விழா நடைபெறும். இதில் நம் இயக்க தலைவர் மோகன் பகவத் உரையாற்றுவார். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்." என்று கூறியுள்ளனர்.
பின்னணி அரசியல்
இது அரசியல் ரீதியாக விமர்சனமாகியுள்ளது. அதேநேரத்தில் ஆர்எஸ்எஸின் இந்த நகர்வுக்கு பின்னால் பெரிய அரசியல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜகவுக்கான அடித்தளத்தை ஆர்எஸ்எஸ் அமைத்து கொடுத்தாலும், அந்த இயக்கம் பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக விமர்சனம் உள்ளது. அதை மாற்றுவதற்கு அவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக தான் ராம்நாத் கோவிந்தை தங்களின் சிறப்புமிக்க விஜயதசமி விழாவுக்கு விருந்தினராக அழைத்துள்ளனர். இதன் மூலம் தாங்கள் அனைவருக்கும் சமமானவர்கள் என்பதை உணர்த்துவதற்காக ஆர்எஸ்எஸ் முயற்சி செய்வதாக தேசிய அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications