டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

740 கோடி இமாலய மோசடி.. ரான்பாக்ஸி மாஜி புரமோட்டர் சிவிந்தர் மோகன் சிங் அதிரடி கைது

Google Oneindia Tamil News

டெல்லி: ரான்பாக்ஸி லேபாரட்டரிஸ் முன்னாள் புரமோட்டர், சிவிந்தர் மோகன் சிங், டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவால் இன்று மாலை கைது செய்யப்பட்டார். ரிலிகேர் என்ற நிதிச் சேவை நிறுவனத்தால் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிவிந்தர் சிங் மேலும் மூன்று பேருடன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர்களில் ரிலிகேரின் முன்னாள் தலைவர் சுனில் கோத்வானியும் ஒருவர்.

ரிலிகேர் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலிகேர் ஃபின்வெஸ்ட் லிமிடெட்தான் புகார் அளித்தது. அந்த நிறுவனத்தில் சிவிந்தர் சிங் மற்றும் அவரது சகோதரர் மால்வீந்தர் சிங் ஆகியோர் புரமோட்டர்களாகவும், சுனில் கோத்வானி சேர்மேனாகவும் இருந்தனர்.

Former Ranbaxy promoter Shivinder Singh arrested over fraud

சிவிந்தர் சிங் தனது சகோதரர் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுடன் சேர்ந்து கொண்டு, தாங்களே துவங்கிய போலி கம்பெனிகளுக்கு நிறுவன பணததை முறைகேடாக கடன் என்ற பெயரில் வழங்கிய வகையில், ரூ.740 கோடி மோசடி செய்ததாக, புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேடுகள், சிவிந்தர் சிங் மற்றும் மால்வீந்தர் சிங் ஆகியோர் ரிலிகேர் மற்றும் ஃபோர்டிஸ் மருத்துவமனை விவகாரங்களின் பொறுப்பு வகித்த காலத்திலிருந்தே நடந்துள்ளன.

சீனாவிடம் இந்தியா வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. ஈஸ்வரன் ஏன் எச்சரிக்கிறார் தெரியுமா?சீனாவிடம் இந்தியா வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. ஈஸ்வரன் ஏன் எச்சரிக்கிறார் தெரியுமா?

சிங் சகோதரர்கள் கடந்த 10 வருடங்களில், ரூ .22,500 கோடிக்கு மேல் மோசடி செய்த பின்னர் பிரச்சினைகள் ஆரம்பித்தன. ஏனெனில், இந்த காலகட்டத்தில், ஃபோர்டிஸ் மற்றும் ரிலிகேர் பெரும் கடன் சுமைக்கு உள்ளானது. சிங் சகோதரர்கள் தங்கள் தொழில்களில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் போக இது வழிவகுத்தது.

English summary
Shivinder Mohan Singh, the former promoter Ranbaxy Laboratories, was arrested by the Delhi Police's Economic Offenses Wing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X