அடிமேல் அடி: வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய முன்னாள் சிறப்பு டிஜிபி: உச்சநீதிமன்றம் மறுப்பு
தன் மீதான பாலியல் வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய முன்னாள் சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பெண் காவல் அதிகாரிக்கு பாலியில் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரிய முன்னாள் சிறப்பு டிஜிபியின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். விழுப்புரம் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கி உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற கோரியதையும் ஏற்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய அறிவுறுத்தியுள்ளது.

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை
தமிழக சிறப்பு டிஜிபி பாதுகாப்பு பணியின் போது தனக்கு கீழ் பணியாற்றும் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை தந்ததாக புகாரின் பேரில் தமிழக அரசிடம் பெண் எஸ்.பி புகார் அளித்தார். புகாரை விசாரிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் விசாகா லமிட்டி போடப்பட்டது. உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து எடுக்கப்பட்ட வழக்கில் அரசுக்கு எழுப்பிய கேள்வி அடிப்படையில் முன்னாள் சிறப்பு டிஜிபியும், அவருக்கு உதவிய எஸ்.பி கண்ணனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது.

விசாகா கமிட்டி, சிபிசிஐடி போலீஸ் விசாரணை
காவல்துறை விசாரணை அடிப்படையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தனக்கு எதிரான விசாகா கமிட்டி அதிகாரிகளுக்கு எதிராகவும், விழுப்புரம் நீதிமன்ற வழக்கை மாற்றக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து வழக்கு விசாரணையை விரைவாக முடிக்கும்படி உத்தரவிட்டது.

வேறு மாநிலத்துக்கு வழக்கை மாற்ற கோரிக்கை
இந்நிலையில் தனக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையை ஆந்திர மாநிலம் நெல்லூர் அல்லது வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், "இந்த வழக்கு தமிழகத்தில் நியாயமான முறையில் விசாரணை நடக்கவில்லை.
தொடர்ந்து தமிழகத்தில் விசாரணை நடைபெற்றால் தனது தரப்பு நியாயங்களை, வாதங்களை முழுமையாக எடுத்து வைக்க முடியாது என்பதால் இந்த வழக்கை ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு மாற்ற வேண்டும்.

விழுப்புரம் நீதிமன்ற வழக்கை சென்னை நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிக்கை
அதேபோல சம்பவம் தொடர்பாக விசாரணை வரம்பில் இல்லாத விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகின்றது என்பதால் அங்கு நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்" என்று ராஜேஷ் தாஸ் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் யு.யு.லலித், ரவீர்ந்தர பாட் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஸ் தாஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி "இந்த வழக்கு நாமக்கல் உளுந்தூர்பேட்டை மற்றும் விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களும் சம்பந்தப்பட்ட நிலையில் விழுப்புரத்தில் மட்டும் வழக்கின் விசாரணை நடத்துவது என்பது அதன் அதிகார வரம்பிற்கு மீறியது, மேலும் வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற இதனை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.

கோரிக்கையில் முகாந்திரம் இல்லை - உச்ச நீதிமன்றம்
வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் எந்தவிதமான முகாந்திரமும் இருப்பதாக தெரியவில்லை எனக் கூறிய நீதிபதிகள் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அப்போது குறுக்கிட்ட ராஜேஷ் தாஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வழக்கின் விசாரணையை சென்னைக்காவது மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அனைத்து கோரிக்கையும் தள்ளுபடி
அதற்கு நீதிபதிகள், இதெல்லாம் ஒரு காரணமா? இது தொடர்பாக மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடலாம் என அனுமதி வழங்கியதோடு, மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். முன்னதாக தனக்கு எதிரான இந்த பாலியல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications