டெல்லி சட்டசபை தேர்தலில் புதிய பரபரப்பு- பாஜக முதல்வர் வேட்பாளராக களமிறங்குகிறார் ஸ்மிருதி இரானி?
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறாராம். டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் சட்டசபை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படும் ஸ்மிருதி இரானி, பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என்கிற தகவல்களால் டெல்லி தேர்தல் களம் பரபரப்பாகி இருக்கிறது.
டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. டெல்லி யூனியன் பிரதேச சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

டெல்லி தேர்தல் களத்தில் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தொடர்ந்து 3-வது முறையாக தக்க வைக்க தீவிரம் காட்டுகிறது. 25 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. டெல்லியில் தமது இருப்பையே இழந்து போன காங்கிரஸ் மீண்டும் எழுவதற்கு முயற்சிக்கிறது.
டெல்லி தேர்தலுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி, காங்கிரஸ் அறிவித்துவிட்டன. பாஜகவும் 2 கட்ட வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துகிறது. பாஜக இதுவரை முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதனை ஆம் ஆத்மி தேர்தல் களத்தில் கேள்வியாகவும் எழுப்பி வருகிறது.
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை டெல்லி தேர்தல் களத்தில் இறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக ஊடக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளராக ஸ்மிருதி இரானி அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அத்துடன் டெல்லி தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராகவும் ஸ்மிருதி இரானி முன்னிறுத்தப்படலாம் என்கின்றன ஊடக தகவல்கள்.
மோடியை முதலில் எதிர்த்த, ராகுல் காந்தியை தோற்கடித்த ஸ்மிருதி இரானி
கலைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர் ஸ்மிருதி இரானி. 2003-ம் ஆண்டு முதல் பாஜகவில் பயணிக்கிறார். 2004-ம் ஆண்டு மகாராஷ்டிரா பாஜகவில் மாநில இளைஞர் பிரிவின் துணைத் தலைவரானார். 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் மூத்த தலைவரான கபில் சிபலை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்போது குஜராத் முதல்வராக இருந்த இன்றைய பிரதமர் மோடிதான் தமது தோல்விக்கு காரணம் என குற்றம்சாட்டி பரபரப்பை கிளப்பி இருந்தார் ஸ்மிருதி இரானி. இதன் பின்னர் பாஜகவின் மத்திய குழு உறுப்பினரானார். 2010-ம் ஆண்டு பாஜகவின் தேசிய செயலாளரானார். பாஜகவின் மகிளா மோர்ச்சா தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2011-ம் ஆண்டு குஜராத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் அமேதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். ஆனாலும் அப்போது மத்திய அமைச்சராக்கப்பட்டார். 2019-ம் ஆண்டு மீண்டும் அமேதியில் போட்டியிட்டு ராகுல் காந்தியை தோற்கடித்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். கடந்த 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அமேதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோர் லால் சர்மாவிடம் தோல்வியைத் தழுவினார் ஸ்மிருதி இரானி. தற்போது மீண்டும் டெல்லி அரசியலில் முதல்வர் வேட்பாளராக நுழையக் கூடும் என்கின்றன ஊடக வட்டாரங்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications