8 முதல் 12 மணி நேரம் வேலை வாங்க அனுமதி.. 4 சட்டங்களை அமலுக்கு கொண்டு வந்த மத்திய அரசு.. முழு விவரம்!
டெல்லி: நாடு முழுவதும் ஒருநாளில் 8 முதல் 12 மணி நேரம் வரை தொழிலாளர்களிடம் வேலை வாங்குவதற்கான சட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. வாரத்திற்கு ஒரு பணியாளரிடம் அதிகபட்சம் 48 மணி நேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும் என்ற சட்ட வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டதோடு, தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே ஓவர் டைம் முறையில் வாங்க வாங்கலாம் என்றும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
4 தொழிலாளர் சட்டங்களை இன்று முதல் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. ஊதியச் சட்டம், தொழில் உறவுகள் சட்டம், சமூகப் பாதுகாப்பு சட்டம், பணியிட பாதுகாப்பு சட்டம் என்று 4 புதிய தொழிலாளர்கள் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. ஏற்கனவே அமலில் உள்ள 29 தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு மாற்றாக இந்த 4 தொழிலாளர் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தியாவில் மாறி வரும் பணிச் சூழல்களை கருத்தில் கொண்டு புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காலத்திற்கு பொருந்தாத சட்டங்களுல்கு பதில் நவீன நிலைமைக்கு ஏற்ப சட்டம் இயற்றப்படுள்ளதாகவும், தொழிலாளர்கள் நலனை உறுதிப்படுத்துவது, எதிர்காலத்திற்கு ஏற்ப தொழிலாளர்களை உருவாக்குவதே இந்த சட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தொழில்கள் நீடித்து இயங்குவதை உறுதி செய்வதும் தொழிலாளர் சட்டங்களின் நோக்கம் என்றும், 1930, 1950 ஆகிய ஆண்டுகளில் இயற்றப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் இன்றைய சூழலுக்கு பொருத்தமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொழிலதிபர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகளும் புதிய சட்டத்தில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின்படி, 1. வேலையில் சேரும் போதே தொழிலாளர்களின் பணிக் காலத்தை தொழிலதிபர்கள் நிர்ணயித்து நியமனம் செய்யலாம். அதேபோல் ஓராண்டு பணிபுரிந்தாலே கிராஜுவிட்டு எனப்படும் பணிக்கொடை பெற தொழிலாளர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. சமவேலைக்கு சம ஊதியத்தை உறுதி செய்வதுடன், ஒப்பந்தப் பணியாளர்களை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் இடையில் பாலின வேறுபாடு காட்டப்படுவதை தடுக்க புதிய சட்டம் வழிவகை செய்கிறது. அதேபோல் பாலியன வேறுபாடு இன்றி சம வேலைக்கு சம ஊதியம் அளிப்பதையும் புதிய சட்டம் உறுதி செய்கிறது. அதேபோல் அனைத்து தொழிலகாளிலும் இரவு ஷிப்ட்களில் பெண்களை பணிபுரிய வைக்க அனுமதிக்க சட்டம் வழிவகை செய்கிறது.
அதேபோல் நிலத்தடி சுரங்கங்களில் பணிபுரிய தயாராக இருக்கும் பெண்களை அப்பணியில் ஈடுபட வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பீடித் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை புதிய சட்டம் நிர்ணயித்துள்ளது. அதேபோல் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் எனப்படும் பணி நியமன உத்தரவு கடிதம் அளிக்க வேண்டும்.
நாடு முழுவதும் ஒருநாளில் 8 முதல் 12 மணி நேரம் வரை தொழிலாளர்களிடம் வேலை வாங்க சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் ஒரு பணியாளரிடம் அதிகபட்சம் 48 மணி நேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும். அதேபோல் தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே ஓவர் டைம் முறையில் வேலை வாங்கலாம். அதேபோல் 180 நாட்களுக்கு பின் வருடாந்திர விடுமுறை, ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
-
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
87 ஓட்டுகளில் கையை விட்டு போன காட்டுமன்னார்கோவில்! 10 ஆண்டு கழித்து மீண்டும் திருமாவளவன் போட்டி! -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
பெரம்பூரில் திலகபாமா, தருமபுரியில் சவுமியா, விருத்தாசலத்தில் தமிழரசி! பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு












Click it and Unblock the Notifications