ரபேல் விமான பேர ஊழல்... தனி நீதிபதியை நியமித்து... நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது பிரான்ஸ்..!
டெல்லி: ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு பற்றி விசாரிக்க தனி நீதிபதியை நியமித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது பிரான்ஸ் அரசு.
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 கோடி மதிப்பில் 36 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு கடந்த 2016-ம் ஆண்டு ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்தது.

இதன்படி இதுவரை பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 23 ரபேல் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்துள்ளது. எஞ்சிய 16 விமானங்களையும் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவுக்கு வழங்க டசால்ட் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இந்நிலையில் ரபேல் விமான கொள்முதல் ஒப்பந்தத்துக்காக இடைத்தரகர் ஒருவருக்கு ரூ.9 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பிரான்ஸ் நாட்டின் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதையடுத்து இந்த விவகாரத்தை கையில் எடுத்த காங்கிரஸ் இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது.
இதனிடையே பிரான்ஸ் நாட்டின் பிரபல புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியாபார்ட், ரபேல் விமான பேர ஊழல் குறித்து துருவி துருவி ஆராய்ந்து தொடர்ச்சியாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இது பிரான்ஸ் அதிபர் மேக்ரனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதனால் ரபேல் விமான பேர ஊழல் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டதுள்ளதுடன் தனி நீதிபதியையும் நியமித்திருக்கிறது பிரான்ஸ் அரசு. இதனிடையே இந்த விவகாரத்தை வைத்து வரும் மழைக்காழ நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் புயலைக் கிளப்பை திட்டமிட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications