ஈரோடு கிழக்கில் வீடு வீடாக கணக்கெடுத்தோம்..40 ஆயிரம் பேர் போலி..சி.வி. சண்முகம் பரபர புகார்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக முன்னாள் அமைச்சரும் அதிமுக நிர்வாகியுமான சி.வி. சண்முகம் புகார் அளித்துள்ளார்.
டெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியல் முறைகேடாக தயாரிக்கப்பட்டுள்ளது என அதிமுக எம்.பி சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்த வாக்காளர்கள் 5,000 பேரின் பெயர் நீக்கப்படவில்லை. 4ல் ஒரு பங்கு அதாவது சுமார் 45 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் வாக்காளர்கள் அந்த தொகுதியில் இல்லை. அவர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளார்.
டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி. சண்முகம், இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள மொத்த வாக்காளர்களில், நான்கில் ஒரு பகுதி வாக்காளர்கள் அந்த தொகுதியில் இல்லை. தொகுதியில் உள்ள 238 பூத்களுக்கும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்ததில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முறைகேடுகளை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளோம். குறிப்பாக 6 பூத்களில் உள்ள முறைகேடுகளை தொகுத்து கொடுத்துள்ளோம். மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை முறையாக பார்க்கவில்லை. ஈரோடு கிழக்குத் தொகுதியில் இறந்த வாக்காளர்கள் 5,000 பேரின் பெயர் நீக்கப்படவில்லை. 4ல் ஒரு பங்கு அதாவது சுமார் 45 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் வாக்காளர்கள் அந்த தொகுதியில் இல்லை. அவர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கில் உள்ள 238 பூத்துகள் அதாவது வாக்குச்சாவடி நிலையங்கள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழங்கப்பட்ட வாக்காளர் பட்டியலை எங்களின் அதிமுக நிர்வாகிகள், தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் தலைமையில் தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் பெரும் மோசடி நடைபெற்றுள்ளது.
238 பூத்களிலும் உள்ள வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. இப்படி ஒவ்வொரு பூத்துக்கும் சுமார் 15லிருந்து 20க்கும் மேற்பட்ட இறந்த வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது என்று கூறினார்.
குறிப்பாக, 236ஆம் எண் கொண்ட பூத், ரயில்வே காலனி பூத். இங்குள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை, 239. இதில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, 670. அங்கே அதிமுக நிர்வாகிகள் கள ஆய்வு செய்யப்பட்டபோது அங்கே இருந்த வீடுகளின் எண்ணிக்கை வெறும் 49. மீதி உள்ள வீடுகள் பாதி இடிக்கப்பட்டுள்ளது, பாதி கைவிடப்பட்டுள்ளது. அந்த பூத்தின் மொத்த வாக்காளர்களில் 518 வாக்காளர்கள் அங்கு இல்லை. இங்கு இருந்த குடியிருப்புகள் ஏற்கனவே வருவாய்த்துறையால் இடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிந்தும் தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் இந்த வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளார்" என கூறியுள்ளார்.

இதேபோல், வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரியில் வீடுகளும் இல்லை, வாக்காளர்களும் இல்லை. பல்வேறு வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளது. இன்று உள்ள தேர்தல் அதிகாரிகள் ஆளும் திமுகவின் சொற்களுக்கு அடிபணிபவர்களாக உள்ளனர். இதனால் தேர்தல் நேர்மையாக நடைபெறாது. எனவே நியாயமான முறையில் தேர்தல் நடைபெற தலைமை தேர்தல் ஆணையம் வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் தலைமை தேர்தல் ஆணையத்திடம் கூறியதாக கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் வரும் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. புரோட்டா சுட்டும், தோசை சுட்டும், ஆம்லேட் போட்டும், டீ போட்டுக்கொடுத்தும் அரசியல்வாதிகள் வாக்கு சேகரித்து வருகின்றனர். முறைகேடுகளைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் அதிகாரியிடம் அதிமுக நிர்வாகிகள் புகார் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications