ஒரே நாளில் 95 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..மத்திய அரசு விளக்கத்துக்குப் பின்னும் அச்சுறுத்தல்!
டெல்லி: நாட்டின் விமான சேவைகளை முடக்கும் வகையில் ஒரே நாளில் 95 விமானங்களுக்கு சமூக விரோதிகள் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்துள்ளனர். இந்த மிரட்டல்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு விளக்கம் அளித்த பின்னரும் இத்தகைய வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு பயணிகள் விமான சேவைகளை முடக்கும் வகையில் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இதனால் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களில் மட்டும் 175 விமானங்களுக்கு இதேபோல வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இன்று ஒரே நாளில் மட்டும் தற்போது வரை 95 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. ஆகாஷா, ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா நிறுவனங்களின் விமானங்களுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன.
சமூக விரோதிகள், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தியே இத்தகைய மிரட்டல்களை விடுவித்து வருவது டெல்லி போலீசாருக்கு சவாலாகவும் மாறி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறுகையில், இத்தகைய மிரட்டல்கள் விடுவிப்பது கடுமையான குற்றம் என எச்சரித்தார்.
டெல்லியில் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளின் விமான சேவைகளுக்கும் இத்தகைய அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதுவும் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு எச்சரிக்கை விடுத்த பின்னரும் இம்மிரட்டல்கள் நீடிக்கின்றன. ஏற்கனவே இது தொடர்பாக மத்திய அரசு விமான சேவை நிறுவன தலைமை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications