ஜேஎன்யூவில் பயங்கரம்.. ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல்..மாணவர், பேராசிரியர்கள் மீது கடும் தாக்குதல்
Recommended Video
டெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் பெரும் மோதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. மாணவர் யூனியன் தலைவர் ஆயிஷ் கோஷ் தாக்கப்பட்டு மண்டை உடைந்து ரத்தம் வரும் அளவுக்கு நிலைமை அங்கே மோசமாகியுள்ளது.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதிக் கட்டணம் உள்ளிட்டவை சமீபத்தில் உயர்த்தப்பட்டன. இதை எதிர்த்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி ஆதரவளிக்கவில்லை. இன்றும்கூட பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் கண்டன பேரணி நடத்தினர். அப்போது ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் இந்த பேரணியில் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதன் பிறகு வெளியிலிருந்து மேலும் பலரும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் திபுதிபுவென வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே முகத்தில் துணியை வைத்து கட்டிக் கொண்டு தங்கள் அடையாளத்தை மறைக்கும் வகையில் வந்துள்ளனர். ஹாஸ்டல் அறைக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்து நொறுக்கி உள்ளனர். அவர்கள் கைகளில் உருட்டுக்கட்டை, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்துள்ளன.
Jawaharlal Nehru University Student Union (JNUSU) President Aishe Ghosh at JNU: I have been brutally attacked by goons wearing masks. I have been bleeding. I was brutally beaten up. pic.twitter.com/YX9E1zGTcC
— ANI (@ANI) January 5, 2020
அப்போது மாணவர் யூனியன் தலைவரான ஆயிஷ் கோஷ் (பெண்மணி) தலையில் அந்த நபர்கள் ஓங்கி அடித்துள்ளனர். இதனால் அவரது தலையில் இருந்து குபுகுபுவென ரத்தம் வழிந்தபடி இருந்தது. வீடியோ ஒன்றில் அந்த நிலையிலும், அவர் பேசியுள்ளார். முகத்தில் மாஸ்க் அணிந்த சிலர் என்னை மிக மோசமாக தாக்கினர். என்னால் இப்போது பேச முடியாத நிலையில் இருக்கிறேன், என்று தழுதழுத்த குரலில் ஆயிஷ் கோஷ் கூறுகிறார்.
Armed masked goons in large numbers have entered #JNU premises and hostels - beating up girls and students; vandalising properties and terrorising people. #JNUSU president brutally attacked! @DelhiPolice @HMOIndia @PMOIndia @ArvindKejriwal - pls help now! pic.twitter.com/ojjS0b1XHr
— Akriti Bhatia (@AkritiBhatiaa) January 5, 2020
அவரது தலையில் இருந்து ரத்தம் வடிவது அந்த வீடியோ காட்சிகளில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து ஆயிஷ் கோஷ் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
முதல் வன்முறைச் சம்பவம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள பெரியார் ஹாஸ்டல் பகுதியில் வைத்து நடந்ததாக கூறப்படுகிறது. பிறகு பிற பகுதிகளிலும் வன்முறை கும்பல் வெறியாட்டம் நடத்தியுள்ளது. பேராசிரியர்களும் தாக்கப்பட்டுள்ளனர். உதவிக்கு சென்ற ஆம்புலன்சுகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
#JNUSU president and #SFI leader #AshieGhosh is attached by #ABVP and #RSS goons at #JNU gate. pic.twitter.com/4TXK6LIlcI
— Mahesh Kumar (@maheshu483) January 5, 2020
இந்த தாக்குதலின் பின்னணியில் ஏபிவிபி இருப்பதாக, இடதுசாரி மாணவர்கள், குற்றம் சாட்டுகின்றனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் யூனியன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலும் இதே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
Female students have locked themselves up inside the girls' wing in Sabarmati Hostel. These attackers are roaming the corridors with rods and sticks. ABVP terrorists have broken the cars parked outside. We are under attack. #EmergencyinJNU #SOSJNU pic.twitter.com/rNcB15hVte
— JNUSU (@JNUSUofficial) January 5, 2020
நேற்று சனிக்கிழமை ஏபிவிபி மாணவர் அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல் மாணவர்களைத் தாக்கியது. முதலாம் ஆண்டு எம்.ஏ. பயிலும் மாணவிக்கு இந்த தாக்குதலில் கால் முறிவு ஏற்பட்டது. இன்றைய தினம் மீண்டும் அவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications