பொற்கோவில் + பிரம்மோஸ் + சீனா.. இந்தியா - பாக் போர் பற்றி.. அடுத்தடுத்து வெளியாகும் ரகசியங்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா பாகிஸ்தான் போரின் போது என்னவெல்லாம் நடந்தது என்று அடுத்தடுத்து பல்வேறு ரகசியங்கள் வெளியாகி வருகின்றன. இதில் இந்தியா பிரம்மோஸ் ஏவுகணையை பயன்படுத்தியது தொடங்கி பாகிஸ்தான் - சீனாவின் கூட்டு தாக்குதல் வரை பல ரகசியங்கள் வெளியாகி உள்ளன.

பிரம்மோஸ் ஏவுகணை

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் விமானப்படை தளங்களை தகர்க்க இந்தியா உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளை பயன்படுத்தியதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிப்படுத்தினார். குஜராத்தின் அகமதாபாத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் விமானப்படை வீழ்ந்துவிட்டது.. சீனா வழங்கிய வான் பாதுகாப்பு அமைப்பு பயனற்றதாக இருந்தது என்று கூறினார்.

நமது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை அமைப்பு கைகொடுத்தது. பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை அழிக்க இவை செயல்பட்டதால் பாகிஸ்தான் வீழ்ந்துவிட்டது. சீனாவிலிருந்து கடனுக்கு வாங்கப்பட்ட அதன் சொந்த வான் பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானுக்கு கைகொடுக்கவில்லை.

நமது விமானப்படை துல்லியமான தாக்குதல்களை நடத்தியது மற்றும் பாகிஸ்தானில் பல இடங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. பிரம்மோஸ் ஏவுகணைகளை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. சீனாவின் தடுப்பு அமைப்புகளை பயன்படுத்தி பாகிஸ்தானால் இந்திய ஏவுகணைகளை தடுக்க முடியவில்லை, என்று அமித் ஷா குறிப்பிட்டார்.


சீனா தலையீடு

கடந்த மே 10ம் தேதி நிறைவு பெற்ற இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலின் போது சீனா பாகிஸ்தானுக்கு வான் பாதுகாப்பு மற்றும் செயற்கைக்கோள் உதவிகளை வழங்கியதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. இந்தியா முன்னர் கருதியதை விட கூடுதலாக சீனா இந்த மோதலில் நேரடியாக ஈடுபட்டுள்ளது என்று அவர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் துருப்புக்கள் மற்றும் ஆயுதங்கள் எங்கே உள்ளன, போர் விமானங்கள் எந்த ஹேங்கரில் உள்ளன என்பது உள்ளிட்ட பல விஷயங்களை திறம்பட கண்டறிய சீனா தனது ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை பாகிஸ்தானுக்கு வழங்கி உதவியது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூட்டுப் போர் ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் அசோக் குமார் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 22 அன்று 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற படுகொலைக்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தொடங்குவதற்கும் இடையிலான 15 நாள் இடைவெளியில் சீனா பல தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கி உள்ளது. இந்தியா மீதான தனது செயற்கைக்கோள் கவரேஜை சரிசெய்ய சீனா பாகிஸ்தானுக்கு உதவியது என்று அவர் கூறினார். இந்த இடைவெளியில் பல செயற்கோள் தகவல்கள், போர் திட்டமிடல் தொடர்பான பல தகவல்களை சீனா இந்தியாவிற்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்தியா பாகிஸ்தான் போரில் எதிர்பார்த்ததை விட அதிகமாக சீனா தலையிட்டு இருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகிப்பதாக தகவல்கள் வருகின்றன. பாகிஸ்தான் ராணுவத்திடம் சீனாவின் ஜே ரக போர் விமானங்கள், PL-15 வகை ஏவுகணைகள் என்று பல உள்ளன. பாகிஸ்தானின் 80 சதவிகித போர் உபகரணங்கள் சீனாவிடம் இருந்து வாங்கப்பட்டது. இதெல்லாம் இந்திய ராணுவத்திற்கு தெரிந்ததுதான்.

இதில் அதிர்ச்சி தரும் தகவல் இந்தியா பாகிஸ்தான் போரில் Chinese PL-15 வகை ஏவுகணைகளை சீனர்களே இயக்கியதாக கூறப்படுகிறது. அதாவது சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட டெக்னீஷியன்களை களமிறக்கி பணிகளை செய்துள்ளனர். அதாவது இந்தியாவிற்கு எதிராக ஏவப்பட்ட ஏவுகணைகளை பாகிஸ்தானில் இருந்து இயக்கியது சீனர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

India averted the drones and missiles of Pakistan that came towards golden temple


பொற்கோவில் அட்டாக்

இந்தியா பாகிஸ்தான் போரின் போது இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக அமிர்தசரஸின் பொற்கோயிலை குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவியது. ஆனால் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இதை முறியடித்தது என்று இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக 15 காலாட்படை பிரிவின் GOC மேஜர் ஜெனரல் கார்த்திக் சி சேஷாத்ரி ANI செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்துள்ளார்.

வான் பாதுகாப்பு அமைப்புகள் சரியான நேரத்தில் செயல்படுத்தப்பட்டதால் இதனால் பாகிஸ்தானின் மோசமான திட்டம் முறியடிக்கப்பட்டது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது

மே 8 அன்று, இருள் சூழ்ந்த நேரத்தில், பாகிஸ்தான் ஆளில்லா வான்வழி ஆயுதங்கள், முதன்மையாக ட்ரோன்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதை நாங்கள் எதிர்பார்த்ததால் நாங்கள் முழுமையாக தயாராக இருந்தோம். அப்போதுதான் பொற்கோவிலை நோக்கி டிரோன்கள் வந்தன.

ஆனால் இதை நாங்கள் முன்கூட்டியே கணித்து இருந்ததோம். அவர்களின் மசூதிகள், மதராஸாக்களில் நாம் தாக்குதல் நடத்தினோம். அதற்கு பதிலடியாக இப்படி அவர்கள் செய்யலாம் என்று எதிர்பார்த்தும்.

இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு துப்பாக்கி வீரர்கள் பொற்கோயிலை குறிவைத்து தாக்கப்பட்ட அனைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தினர். ஏவுகணை தடுப்பு அமைப்புகளும் இதற்காக பயணப்படுத்தப்பட்டது. இதனால், நம்முடைய புனித பொற்கோயிலில் ஒரு கீறல் கூட ஏற்பட அனுமதிக்கவில்லை, என்று 15 காலாட்படை பிரிவின் GOC மேஜர் ஜெனரல் கார்த்திக் சி சேஷாத்ரி ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஏவுகணை

பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து கோவிலைப் பாதுகாக்க தேவையான அனைத்து வழிகளிலும் உதவ தங்க கோயில் அதிகாரிகள் முன்வந்ததால் இது சாத்தியமானது என்று ராணுவத்தின் வான் பாதுகாப்புப் பொறுப்பாளர் ஜெனரல் சுமர் இவான் டி'குன்ஹா தெரிவித்துள்ளார். பொற்கோயிலின் தலைமை நிர்வாகி எங்கள் துப்பாக்கிகளை நிலைநிறுத்த அனுமதித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ட்ரோன்கள் வந்தால் எளிதாக கோவிலை பார்க்க முடியும் என்பதற்காக தங்க கோயில் விளக்குகளை அணைக்க கூறினோம்.. பல ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக விளக்குகள் அணைக்கப்பட்டன, என்று லெப்டினன்ட் ஜெனரல் டி'குன்ஹா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் மோதலில் பாகிஸ்தானின் ஃபத்தா-1 ஏவுகணையை இந்தியா பாதுகாப்பு படை தடுத்து நிறுத்தியது. பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறையால் இந்த ஏவுகணை சொந்தமாக உருவாக்கப்பட்டது. இது பாகிஸ்தான் இராணுவ ஸ்ட்ராட்டஜிக் படைகள் கட்டளையின் (ASFC) கீழ் நேரடியாக இயக்கப்படுகிறது.

இதை பாகிஸ்தான் தனது பெருமைக்குரிய ஏவுகணையாக கருதுகிறது. முக்கிய இலக்கை நோக்கிச் சென்ற ஃபத்தா-1 ஏவுகணை தடுத்து அழிக்கப்பட்டது. மேற்குப் பகுதியில் இந்திய வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து அழிக்கப்பட்டது. இந்த சம்பவம் எங்கே நடந்தது என்பது பற்றிய விவரங்கள் ராணுவ பாதுகாப்பு கருதி வெளியிடப்படவில்லை. மேற்குப் பகுதியில் முக்கிய இலக்கை நோக்கிச் சென்ற ஃபத்தா-1 ஏவுகணை அழிக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து வந்த ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா, Akash Missile System உள்ளிட்ட தடுப்பு அமைப்புகள் முறியடித்தது. இந்த நிலையில்தான் பாகிஸ்தான் Shaheen எனப்படும் தனது ஏவுகணை வகையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானிடம் Shaheen 1 முதல் Shaheen 3 வரை உள்ளது. இதில் எந்த ஏவுகணையை அந்த நாடு பயன்படுத்தியது என்ற விவரம் வெளியாகவில்லை. இது நீண்ட தூரம் செல்ல கூடிய பாலிஸ்டிக் வகை ஏவுகணை ஆகும். அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் திறன் கொண்டது.

ஆனால் அணு ஆயுதம் இல்லாமல் இதை வழக்கமான போர் ஆயுதங்களை வைத்து பாகிஸ்தான் ஏவியதாக கூறப்படுகிறது. இதை இந்தியாவின் S-400 Triumf தடுத்து அழித்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+