கார் முதல் டூவீலர்கள் விலை குறையப்போதும்.. ஜிஎஸ்டி வரியை குறைத்து அறிவித்த நிர்மலா சீதாராமன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆட்டோமொபைல் துறையில் கார் முதல் மோட்டார் சைக்கிள்கள்களுக்கு விதிக்கப்பட்ட 28 சதவீத ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி கார்கள் உள்பட அனைத்தின் விலையும் அதிரடியாக குறைய உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார்.

கடந்த சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது நாட்டில் ஜிஎஸ்டி சீர்த்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. நாட்டு மக்களுக்கு தீபாவளிக்கு பரிசு உள்ளதாக கூறினார். இது ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய அரசு பெரிய மாற்றத்தை கொண்டு வர உள்ளது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

from-car-to-motor-cycles-gst-cut-down-from-28-percent-to-18-percent-says-nirmala-sitharaman

இதற்கிடையே தான் டெல்லியில் இன்று 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று தொடங்கியது. மத்திய நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கி உள்ள இந்த கூட்டம் நாளை வரை நடைபெற்றது. உள்ளது. மாநில நிதியமைச்சர்கள், யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள் பங்கேற்றனர். இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 10 மணிக்கு முடிவடைந்தது.

அதன்பிறகு நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு பொருட்கள் மீதான வரியை குறைத்துள்ளார். இதனால் கார், மோட்டார் சைக்கிள்களின் விலை குறைய உள்ளது. இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

1200 சிசி மற்றும் 4000 மில்லிமீட்டர் நீளத்துக்கு குறைவான பெட்ரோல், பெட்ரோல் ஹைப்ரிட், எல்பிஜி, சிஎன்ஜி கார்கள் மீதான 28 சதவீத ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டீசல், 1,500 சிசிக்கு குறைவான டீசல் ஹைப்ரிட் கார்கள், 3 சக்கர வாகனங்கள், 350 சிசிக்கு குறைவான மோட்டார் சைக்கிள், சரக்குகளுக்கான மோட்டார் வாகனங்கள் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இதன்மூலம் பெட்ரோல், டீசல், 3 சக்கர வாகனங்கள், டூவீலர்களின் விலைகள் அதிரடியாக குறைய உள்ளன. அதன்படி மேற்கூறிய வகைகளை சேர்ந்த கார்களின் விலை சுமார் ரூ.50 ஆயிரம் வரை சரிய வாய்ப்புள்ளதாக ஆட்டோமொபைல் துறையில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் கூட சொகுசான ஆடம்பர கார்களின் விலை அதிகரிக்க உள்ளது. அதன்படி, ஆடம்பரமான கார்கள், வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதன்படி இறக்குமதி செய்யப்பட்ட கார்கள், Dutiable தனிப்பட்ட பயன்பாட்டுக்கான கார் உள்ளிட்டவற்றுக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 1200cc க்கும் அதிகமான பெட்ரோல் இன்ஜினக்களின் மற்றும் 1500cc டீசல் இன்ஜின்கள் கொண்ட சொகுசு மற்றும் பிரீமியம் கார்களுக்கான ஜிஎஸ்டி வரியும் 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஜிஎஸ்டி வரி செப்டம்பர் 22ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+