"கம்பி கட்டுற கதைலாம் சொல்றாரு பாருங்க".. கொரோனா சிகிச்சையில் வதந்திகளை பரப்பும் ராம்தேவ்.. சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் கொரோனாவிற்கு எதிராக தொடர்ந்து தவறான மருத்துவ முறைகளை பரிந்துரைப்பதையும், அலோபதி மருத்துவ முறையை ஆதாரமின்றி விமர்சிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையிலும் கூட மக்கள் பலர் வேக்சின் எடுக்க அச்சம் தெரிவித்து, வேக்சின் எடுக்க முன் வராமல் முடங்கி கிடக்கிறார்கள். உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் வேக்சின் போட வரும் அதிகாரிகளுக்கு பயந்து மக்கள் தண்ணீரில் குதிக்கும் சம்பவங்கள் கூட நடக்கின்றன.

இந்தியாவில் மக்கள் பலர் வாட்சப் வதந்திகளையும், பொய்யான செய்திகளையும் நம்பி வேக்சின் எடுக்க மறுப்பது, கொரோனாவிற்கு தவறான சிகிச்சை மேற்கொள்வது என்று பல தவறுகளை செய்து வருகிறார்கள். மக்களிடையே வதந்திகளையும், பொய்களையும் பரப்புவதில் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் முக்கியமான நபராக திகழ்ந்து வருகிறார்.

எப்படி

எப்படி

கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்தே, அதற்கு தவறான சிகிச்சை முறைகளை பரிந்துரைப்பதையும் அல்லது அலோபதி மருத்துவ முறைகளை கேள்வி எழுப்புவதையும் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் வேலையாக வைத்து வருகிறார்.கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவமுறை முட்டாள்தனமான அறிவியல். அவர்களின் ரெமிடிஸ்வர் உள்ளிட்ட மருந்துகள் எதுவும் கொரோனாவை குணப்படுத்தவில்லை.

மரணம்

மரணம்

இந்தியாவில் ஆக்சிஜன் இல்லாமல் பலியானவர்களை விட, இந்த அலோபதி மருந்துகள் மூலம்தான் பலர் பலியாகி உள்ளனர் என்று மிக தவறான தகவல்களை பகிர்ந்தார். இந்த சம்பவம் பெரிய சர்ச்சையான நிலையில் இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பாக மத்திய சுகாதார துறையிடம் புகார் வைக்கப்பட்டது. இதையடுத்து பாபா ராம்தேவ் தனது கருத்தை வாபஸ் வாங்குவதாக குறிப்பிட்டார்.

உடல்நிலை

உடல்நிலை


தனது உடல்நிலை மோசமான போது கூட பதஞ்சலி மருந்துகளை நாடாமல் நேராக அலோபதி மருத்துவத்தை நாடியவர்தான் பாபா ராம்தேவ். அப்படிப்பட்ட நபர்தான் அலோபதி மருத்துவத்தை விமர்சனம் செய்துள்ளார். அதிலும் 10000 மருத்துவர்கள் இரண்டு டோஸ் வேக்சின் எடுத்த பின்பும் பலியானதாக ஆதாரமற்ற தகவல்களை பகிர்ந்தார்.

இதற்கு முன்

இதற்கு முன்

மக்கள் இடையே வேக்சின் மீது சந்தேகம் உள்ள நிலையில் ராம்தேவ் இப்படி ஆதாரமற்ற தகவல்களை பரப்பினார். பாபா ராம்தேவ் இப்படி தவறான, ஆதாரமற்ற தகவல்களை பகிர்வது புதிதல்ல. இதற்கு முன்பே இப்படி பல முறை பாபா ராம்தேவ் பேசி இருக்கிறார். கொரோனா நோயாளிகள் யோகா செய்தால் இதயம் வலிமை அடையும், நுரையீரல் வலிமை அடையும். இதனால் அவர்களின் நுரையீரல் கொரோனாவை எதிர்கொள்ளும் வலிமை பெறும் என்றும் குறிப்பிட்டார்.

வேறு என்ன

வேறு என்ன

அதோடு ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பதெல்லாம் கட்டுக்கதை, கொரோனா நோயாளிகளுக்கு மூச்சு விடுவது எப்படி என்று தெரியவில்லை. அவர்கள் நெகட்டிவிட்டியை பரப்புகிறார்கள். அவர்களுக்கு மூச்சு விடுவது எப்படி என்று தெரியவில்லை. நமது மூக்குதான் ஆக்சிஜன் சிலிண்டர்.

பேன்

பேன்

நமது மூக்கில்தான் ஃபேன் இருக்கிறது. அதன் மூலம் எளிதாக ஆக்சிஜனை சுவாசிக்க முடியும், என்று "கம்பி கட்டும் கதையை" எல்லாம் பரப்பிக்கொண்டு இருந்தார். இதே பாபா ராம்தேவ்தான் சில நாட்களுக்கு முன் கொரோனாவை குணப்படுத்தும் மருந்து என்று கொரோநில் மருந்தை வெளியிட்டார். பின்னர் இதன் லைசன்ஸ் நீக்கப்பட்ட நிலையில், கொரோனாவிற்கு எதிரான இம்யூன்ட்டி பூஸ்டர் என்று பெயர் மாற்றி வெளியிட்டார்.

தவறு

தவறு

அதிலும் இந்த மருந்துக்கு உலக சுகாதார மையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் இதை 150 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்றெல்லாம் கதை விட்டார். ஆனால் உலக சுகாதார மையம் இதை உடனே மறுத்தது. அதேபோல் இந்திய மருத்துவ கழகமும் பாபா ராம்தேவை உடனே இதற்காக கண்டித்தது. இதற்கு முன்னே யோகா கிளாஸ் என்ற பெயரில் நிரூபிக்கப்படாத பல விஷயங்களை பரப்பி உள்ளார்.

இரண்டாம் அலை

இரண்டாம் அலை

இந்த கொரோனா இரண்டாம் அலை என்பது கும்பமேளா, இந்துதுவாவிற்கு எதிரான சதி என்றும் கூட பாபா ராம்தேவ் குறிப்பிட்டு இருக்கிறார். அதோடு அலோபதி மருத்துவம் சிறந்தது என்றால் ஏன் மருத்துவர்களுக்கு நோய் வருகிறது என்றெல்லாம் கூட அபூர்வ முத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். இப்படி இவர் ஒரு பக்கம் சர்ச்சைகளை பரப்பி வரும் நிலையில்தான் அவரின் நெருக்கிய நிர்வாகியே கொரோனாவிற்கு பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பலி

பலி

ஆம், பதஞ்சலி நிறுவனத்தின் பால் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோக பிரிவின் சிஇஓ சுனில் பன்சால் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவரின் நுரையீரல் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது. மூளைக்கு செல்லும் ரத்தமும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தது. எக்மோ உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த சிஇஓ சுனில் பன்சால் இன்று சிகிச்சை பலனின்றி பலியானார். பாபா ராம்தேவை பின்பற்றி வரும் பலரிடம் இது பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+