ரூ500,1000 நோட்டுகள் தீர்ப்பு முதல் தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி வரை.. 2023-ல் நடந்தது என்ன?
டெல்லி: 2023ம் ஆண்டின் தொடக்கத்திலேயே ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. 2023-ம் ஆண்டு நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
2 ஜனவரி: 2016-ல் அறிவிக்கப்பட்ட ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவு சரியானதே என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

4 ஜனவரி: காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவேரா காலமானார்.
12 ஜனவரி: முதுபெரும் வட இந்திய அரசியல் தலைவர் சரத் யாதவ் காலமானார்.
18 ஜனவரி - இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷனுக்கு (WFI) எதிராக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் போராட்டம்
பிப்ரவரி 26 - டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
2 மார்ச் - திரிபுரா மற்றும் நாகாலாந்து சட்டசபை தேர்தல்களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. மேகாலயாவில் தொங்கு சட்டசபை உருவானது.
2 மார்ச்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங். வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார்
மார்ச் 18 - காலிஸ்தான்- சீக்கியர் தனிநாடு கோரும் "வாரிஸ் பஞ்சாப் தே" என்ற அமைப்பு மீது காவல் துறை நடவடிக்கை எடுத்தது. பஞ்சாப் போலீசாரால் 112 பேர் கைது செய்யப்பட்டனர்
23-24 மார்ச் - மோடி தொடர்பான பேச்சுக்காக ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம். இதனால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.
31 மார்ச் - ம.பி. இந்தூர் கோவிலில் கிணறு படிக்கட்டு இடிந்து விழுந்ததில் 36 பேர் பலி.
4 ஏப்ரல் - சிக்கிம், நாது லாவில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஏழு பேர் பலி.
12 ஏப்ரல்- பஞ்சாபில் ராணுவ தளம் மீதான தாக்குதலில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
15 ஏப்ரல் - மகாராஷ்டிராவின் ராய்காட்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் 12 பேர் பலி.
15 ஏப்ரல் - உ.பி. பிரயாக்ராஜில் நடந்த என்கவுண்ட்டரில் நிழல் உலக தாதா அட்டிக் அகமது, அஷ்ரஃப் அகமது சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் 23 - காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் சரணடைந்ததால் கைது செய்யப்பட்டார்.
3 மே - 2023: மணிப்பூரில் குக்கி- மைத்தேயி இனக்குழுக்களிடையே மோதல் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
10-13 மே - 2023 கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.
19 மே - 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.
28 மே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதில் தமிழ்நாட்டின் செங்கோல் வைக்கப்பட்டது.
மே 30 - ஜம்மு காஷ்மீரில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்ததில் வைஷ்ணோ தேவி யாத்ரீகர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
2 ஜூன்: ஒடிஷாவில் ரயில்கள் மோதியதில் 280 பேர் கொல்லப்பட்டனர்; 900 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
17 ஜூன் - உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் வெப்பத்தால் 96 பேர் மரணம்.
1 ஜூலை: மகாராஷ்டிராவின் புல்தானாவில் உள்ள சம்ருத்தி விரைவு சாலையில் பேருந்து தீப்பிடித்ததில் 26 பேருந்து பயணிகள் இறந்தனர்.
12 ஜூலை - இமாச்சல்மற்றும் பஞ்சாபில் வெள்ளம்- 41 பேர் பலி.
18 ஜூலை - பாஜகவுக்கு எதிராக I.N.D.I.A கூட்டணி உதயம்.
19 ஜூலை: பெங்களூரில் 5 பயங்கரவாதிகள் கைது
31 ஜூலை: ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கான்ஸ்டபிள் சேத்தன் சிங் உயர் அதிகாரி மற்றும் மூன்று பொதுமக்களைக் கொன்றார்.
2023 ஹரியானாவில் வன்முறை வெடித்தது.
ஆகஸ்ட் 4 - டெல்லியில் அதிகாரிகளின் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பாக மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும் சர்ச்சைக்குரிய டெல்லி அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஆகஸ்ட் 7 - ராகுல் காந்தியின் லோக்சபா எம்பி பதவி திரும்ப வழங்கப்பட்டது.
23 ஆகஸ்ட்: சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் தென் துருவம் அருகே தரை இறங்கியது.
1 செப்டம்பர் - மகாராஷ்டிர மாநிலம் ஜல்னாவில் மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
2 செப்டம்பர் - சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 விண்கலம் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டது.
செப்டம்பர் 9-10 - டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற்றது.
19 செப்டம்பர் - சட்டசபை , நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.
4 அக்டோபர் - சிக்கிம் மேக வெடிப்பு காரணமாக குறைந்தது பெரும் வெள்ளம்- 74 பேர் பலி
17 அக்டோபர் - ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
29 அக்டோபர் - கேரளாவின் கலமசேரியில் யெகோவாவின் சாட்சிகளின் பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு- 6 பேர் பலி
29 அக்டோபர்: ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் கொத்தவலசா சந்திப்பு ரயில் நிலையம் அருகே விசாகப்பட்டினம்-பலாசா பயணிகள் ரயில் மோதி ஒருவர் பலி.
நவம்பர் 7 - மிசோரம், சத்தீஸ்கர் முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
15 நவம்பர் விபத்து: ஜம்மு மற்றும் காஷ்மீர், தோடா மாவட்டத்தில், பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சாலையில் இருந்து தவறி 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து 39 பேர் கொல்லப்பட்டனர்
17 நவம்பர்: மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் 2-வது கட்ட தேர்தல் நடைபெற்றது
25 நவம்பர்- ராஜஸ்தானில் தேர்தல் நடைபெற்றது.
29 நவம்பர் - உத்தரகாண்ட் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் இருந்து 41 கட்டுமானத் தொழிலாளர்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
30 நவம்பர்- தெலுங்கானாவில் தேர்தல் நடைபெற்றது.
டிசம்பர் 3: சத்தீஸ்கர், ராஜஸ்தான், மபி தேர்தலில் பாஜக வென்றது; தெலுங்கானாவில் காங்கிரஸ் வென்றது; மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வென்றது
டிசம்பர் 3,4- மிக்ஜாம் புயல் சென்னையில் பெருமழை வெள்ளத்தைக் கொட்டியது. வரலாறு காணாத பெருமழையால் சென்னை மாநகரும் புறநகரும் தத்தளித்தது
டிசம்பர் 7- தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்.












Click it and Unblock the Notifications