பிச்சை எடுத்து வட்டிக்கு விட்டு கோடீஸ்வரர் ஆன யாசகர்.. 3 வீடுகள், கார்கள் சொந்தமாக இருக்காம்
டெல்லி: இந்தூரில் சொந்தமாக 3 வீடுகள், 3 ஆட்டோக்கள், மாருதி கார் வைத்திருக்கும் கோடீஸ்வர யாசகர் பிடிபட்டுள்ளார். யாசகம் பெற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிச்சை எடுப்பவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்ட போது, மாற்றுத்திறனாளியான மங்கிலால் என்பவர் யாசகம் பெற்று அதை வட்டிக்கு விட்டு பல கோடி வருமானம் ஈட்டியது கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் யாசகம் பெற்று வருபவர் மங்க்லால். மாற்றுத்திறனாளியான இவர் சர்பாசா பஜார் பகுதியில், மக்களிடம் பண உதவி கேட்டு அமர்ந்து இருப்பார்.

சொந்தமாக மூன்று வீடுகள், கார்
இரு கால்களும் நடக்க முடியாமல் பலகை வண்டி ஒன்றில் அமர்ந்து இருந்து யாசகம் பெறும் ஒரே நாளில் நாடு முழுக்க பிரபலமானவராகியுள்ளார். அப்படி என்ன செய்தார் என நினைக்கிறீர்களா? இவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியிருக்கிறார்.
இவருக்கு சொந்தமாக மூன்று வீடுகள், மூன்று ஆட்டோ ரிக்ஷாக்கள், ஒரு மாருதி சுசுகி ட்சைர் கார் வைத்துள்ளாராம். சொத்து மதிப்பு மட்டும் கோடிகளை தாண்டும் என்று சொல்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் யாசகம் பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து யாசகம் பெறுபவர்களுக்கு கண்டறிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கோண்டு வரும் நிலையில்தான், இவரது சொத்து மதிப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உதவி செய்யுமாறு கேட்க மாட்டாராம்
கடந்த சனிக்கிழமை இரவு மங்க்லாலை மீட்டனர். அவரை பற்றி விசாரித்த போதுதான், அவரது சொத்து மதிப்பு தெரியவந்து அனைவரையும் வியக்க வைத்து இருக்கிறது. ஒரு நாளைக்கு பிச்சை எடுத்து ரூ.500 முதல் ரூ.1000 வரை சம்பாதிக்கும் மங்கிலாலின் சொத்து மதிப்பு அதிகாரிகளையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தூரில் மிகவும் பிசியான மார்க்கெட்டில் யாசகம் கேட்டு அமர்ந்து இருக்கும் மங்கிலால் ஒருபோதும் யாரிடம் தனக்கு உதவுமாறு கேட்கமாட்டாராம். வெறுமனே அமைதியாக இருந்துள்ளார். இதனால், அவர் மீது இரக்கப்பட்டு அங்கு வருபவர்கள் உதவி செய்து வந்து இருக்கிறார்கள். மக்கள் தாங்களாகவே விரும்பி உதவி செய்து வந்து இருக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு 2 ஆயிரம் வருமானம்
தினமும் பிச்சை எடுக்கும் தொகையை வைத்து, அங்குள்ள கடைகாரர்களுக்கு வட்டிக்கு விடுவாராம். தின வட்டி அல்லது வார வட்டிக்கு கடன் கொடுத்து, வட்டியை வசூல் செய்து வந்துள்ளார். தினமும் மாலை வேளையில் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளார். ஒருநாளைக்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரை இவருக்கு வருமானம் வந்துள்ளது.
கடனாக மட்டும் 4 முதல் 5 லட்சம் கடனாக அளித்து வந்து இருக்கிறார். ஒரு காலத்தில் பணமில்லாமல் கஷ்டப்பட்டு வந்த அவர், தற்போது இந்தூரில் மெயின் ஏரியாவில் மூன்று வீடுகளுக்கு சொந்தக்காரரக உள்ளார். இதில் ஒரு கட்டிடம் மூன்று மாடி கட்டிடம் ஆகும். இதுபோக மூன்று ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் மருதி சுசுகி டிசைர் கார் ஒன்றும் வைத்து இருக்கிறார்.
மோடியின் இலவச வீடையும் வாங்கியிருக்கிறார்
இந்த வாகனங்களை வாடகைக்கு விட்டு அதன் மூலம் பணம் ஈட்டி வந்து இருக்கிறார். இத்தனை வசதி இருந்தும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு படுக்கை அறை, கிட்சன் அடங்கிய ஒரு வீட்டை மானிய விலையிலும் பெற்றுள்ளார். மங்கிலால் குறித்து மத்திய பிரதேசத்தை அதிகாரி தினேஷ் மிஸ்ரா கூறியதாவது:-
தற்போது மங்கிலால் உஜ்ஜைனில் உள்ள சேவதம் ஆஷ்ரமத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது வங்கி கணக்கு மற்றும் சொத்து மதிப்பு பற்றி விசாரித்து வருகிறோம். மங்கிலாலிடம் பணம் பெற்றவர்களிடமும் விசாரணை நடைபெறுகிறது. பிச்சை எடுத்து கிடைக்கும் தொகையை உள்ளூர் வியாபாரிகளுக்கு வட்டிக்கு கொடுத்ததை மங்கிலாலும் ஒப்புக்கொண்டார். தினமும் மாலை நேரத்தில் சராஃபா பகுதிக்கு கடைகாரர்களின் வட்டி பணத்தை வசூல் செய்து வந்துள்ளார்" என்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications