நாளை முழு சூரிய கிரகணம்! இந்த ஆண்டின் முதல் நிகழ்வு.. 4 நிமிடத்திற்கு இருள் சூழும் பகுதிகள் எவை?
டெல்லி: இந்த ஆண்டிற்கான முதல் முழு சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது. இதனால் 4 நிமிடங்கள் மற்றும் 9 நிமிடங்களுக்கு சில பகுதிகளில் இருளில் மூழ்கியிருக்கும்.
இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தென்படாது. கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் தெரியும். கடந்த ஆண்டு நிகழ்ந்த சூரிய கிரகணத்தை விட இந்த ஆண்டு நிகழும் கிரகணத்தின் நேரம் அதிகமாக இருக்கிறது.

மேற்கண்ட 3 நாடுகளில் மட்டுமே இந்த கிரகணத்தை காண முடியும் என்பதால் இது எத்தனை அரியது என்பதை தெரிந்து கொள்ளலாம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக சந்திரன் வரும். அப்போது சூரியனை சந்திரன் மறைப்பதால் கிரகணம் ஏற்படுகிறது.
இந்த ஆண்டு முதல் சூரிய கிரகணம் நாளை நடைபெறுகிறது. சூரிய கிரகணத்தை காண கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் அருகே லட்சக்கணக்கானோர் கூடுவர் என தெரிகிறது. இது போன்ற ஒரு கிரகணம் பசிபிக் பகுதியில் மீண்டும் இடம் பெற வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. இந்த கிரகணத்தில் இலங்கை நேரப்படி இரவு 11.37 மணிக்கும் அமெரிக்க நேரப்படி மதியம் 2.07 மணிக்கும், பின்னர் பிற்பகல் 3.20 மணிக்கு கிரகணம் ஆரம்பமாகும்.

இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு தொடங்கும் கிரகணம், அதிகாலை 2.22 மணிக்கு நிறைவடைகிறது. இந்திய நேரப்படி இரவு நேரத்தில் சூரிய கிரகணம் நடைபெறுவதால் நம்மால் பார்க்க முடியாது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இந்த கிரகணத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சூரிய கிரகணத்தின் போது சந்திரன் பூமியில் இருந்து சுமார் 2.23 லட்சம் மைல்கள் தொலைவில் காணப்படும். இதனால் சந்திரன், பூமிக்கு அருகே காணப்படுவதால் வானில் சந்திரன் பெரியதாக தெரியும். இதனால் சூரிய கிரகணத்தின் போது இருள் இருக்கும். இதற்கு முன்னர் இது போன்ற சூரிய கிரகணம் 1973 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.
இதன் பின்னர் 2150 ஆம் ஆண்டு வரை இது போன்ற ஒரு அரிய கிரகணம் நடைபெறாது என்கிறார்கள். சூரிய கிரகணம், முழு சூரிய கிரகணம், வளைய கிரகணம், பகுதி கிரகணம், முழு சூரிய கிரகணம் இணைந்த சூரிய கிரகணம் என 4 வகைகள் உள்ளன. இதில் நிலவு முழுமையாக மறைக்கும் முழு சூரிய கிரகணமே நாளை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications