ஜி20 மாநாடு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - பிரதமர் மோடி சந்திப்பு.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவை பலப்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆசோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜி 20 மாநாடு டெல்லியில் நாளை தொடங்குகிறது. இந்தியா அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஜி 20 மாநாட்டில் அங்கம் வகிக்கின்றன.

G-20 in India: Prime Minister Narendra Modi meets US President Joe Biden hold a bilateral meeting

தலைநகர் டெல்லியில் நடைபெறும் மாநாட்டுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் ஒன்றாக அணி திரண்டு பங்கேற்க உள்ளனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலியா பிரதமர், சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் என ஏராளமான தலைவர்கள் டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

ரஷ்யா சார்பில் புதின் பங்கேற்கவில்லை. புதினுக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்கிறார். டெல்லிக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் தங்குவதற்காக டெல்லியில் உள்ள முக்கியமான நட்சத்திர விடுதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தற்போதே உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் தலைவர்கள் தங்கும் நட்சத்திர ஓட்டல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஜி 20 மாநாடு நாளை தொடங்க உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று மாலை 6. 55 மணி அளவில் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரை மத்திய அமைச்சர் வி கே சிங் வரவேற்றார். ஏர்போர்ஸ் ஒன் என்ற தனி விமானம் மூலம் ஜோ பைடன் வருகை புரிந்தார். ஜோ பேடன் வருகையொட்டி அமெரிக்க அதிபர்கள் பயணிக்கும் தி பீஸ்டு காடில் லாக் காரும் டெல்லி வந்துள்ளது.

இந்த காரிலேயே அவர் பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை ஜோ பைடன் சந்தித்து பேசினார். இரு நாட்டு தலைவர்களும் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை பலப்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஓட்டலில் தங்குகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+