ஜி20 மாநாடு: கை கோர்த்து அழைத்து வந்த மோடி.. உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி விருந்து அளித்தார்
டெல்லி: ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்கி நடைபெற்றது. நாளையும் நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்கள், அமைச்சர்கள், மாநில முதல்வர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து கொடுத்தார்.
உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக தனது நிலையை இந்தியா வலுப்படுத்தி வருகிறது. ஆண்டு தோறும் ஜி 20 மாநாட்டுக்கு ஒவ்வொரு நாடு தலைமை வகிக்கிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் இந்தியா ஜி 20 மாநாட்டுக்கு தலைமை வகிக்கிறது. அதன்படி, டெல்லியில் ஜி 20 மாநாடு நடக்கிறது.

இந்த மாநாடு இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் முதன்மை அமர்வுக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், னடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜி 20 கூட்டத்தில் பிரகடனமும் வெளியானது. இதைஅனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு ஜனாதிபதி உணவு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில், பங்கேற்க மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை ஏற்று மு.க ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இதேபோல் உலக தலைவர்களும் இந்த விருந்தில் பங்கேற்க பாரத் மண்டபம் வந்தனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி விருந்து நடக்கும் இடத்திற்கு வந்த உலக தலைவர்களை வரவேற்றனர். விருந்துக்கு வந்த உலக தலைவர்களை பிரதமர் மோடி கைகளை கோர்த்துக்கொண்டு விருந்திற்கு அழைத்து சென்றார்.
விருந்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் பங்கேற்றன. இதேபோல் உலக தலைவர்களும் இந்த விருந்தில் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் மிக சுவையான 500 உணவுகளை தேர்வு செய்து ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த தலைவர்களுக்கு அளிக்கப்பட்டது. பிரபல ஓட்டல் நிறுவனமான தாஜ் ஓட்டல் உணவு ஏற்பாடுகளை செய்தது.












Click it and Unblock the Notifications