ஆஹா.. தங்க பாத்திரங்களில் உணவு! வியக்கபோகும் வெளிநாட்டு தலைவர்கள்.. ஜி20 மாநாட்டின் ருசிகரம்.. செம
டெல்லி: டெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் வெளிநாட்டு தலைவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு தங்க தட்டுகளில் உணவு பரிமாறப்பட உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
உலகில் பல நாடுகள் இணைந்து ஒவ்வொரு கூட்டமைப்புகளை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டமைப்புகள் என்பது பெரும்பாலும் அந்தந்த நாடுகளின் வர்த்தகம், உள்நாட்டு பாதுகாப்பு சார்ந்து இருக்கும். அந்த வகையில் ஜி20 கூட்டமைப்பு என்ற பெயரில் மொத்தம் 20 நாடுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இதில் இந்தியா அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியம் ஆகியவை அங்கம் வகிக்கின்றன.
இந்த ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது ஒவ்வொரு நாடுகள் உச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்தும். அந்த வகையில் கடந்த ஆண்டு இந்தோனேசியா ஜி20 மாநாட்டை தலைமையேற்று நடத்தியது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்பிறகு ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜி20 தலைமை பொறுப்பை இந்தோனேசியா பிரதமர் ஜோகோ விடோடோ வழங்கினார். இதையடுத்து 2023ல் ஜி20 மாநாட்டை இந்தியாவில் சிறப்பாக நடத்த இந்தியா திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வந்தது. அந்த வகையில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிற நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்பட கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தனிப்பட்ட காரணங்களாக சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் சார்பில் அந்நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் தான் ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் உலக தலைவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் டெல்லிக்கு வர தொடங்கி உள்ளனர். மேலும் இவர்கள் டெல்லியில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். ஹோட்டலில் இவர்களுக்கு மிகவும் ருசியான இந்திய பாரம்பரிய உணவுகள் முதல் வெளிநாட்டு உணவுகள் வரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க இந்திய பாரம்பரிய கலாசாரங்களை வெளிநாட்டு தலைவர்களுக்கு எடுத்து தெரிவிக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வெளிநாட்டு பிரதிநிதிகள், வெளிநாட்டு தலைவர்களுக்கு வெள்ளி, தங்க முலாம் பூசப்பபட்ட பாத்திரங்களில் உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஐடிசி தாஜ் ஹோட்டல் உட்பட 11 ஹோட்டல்கள் மேற்கொண்டுள்ளன.
இந்த ஹோட்டல்களுக்கு ஐரிஸ் மெட்டல்வார் எனும் கிராக்கரி நிறுவனம் சார்பில் தங்கம், வெள்ளி தட்டுகள் உள்பட பல பாத்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராஜீவ் கூறுகையில், ‛‛வெளிநாட்டு தலைவர்களுக்கு உணவு வழங்கும் பாத்திரங்களை நாங்கள் 3 தலைமுறைகளாக தயாரித்த வழங்கி வருகிறோம்.
இந்த பாத்திரங்கள் ஜெய்ப்பூர், உதய்பூர், வாரணாசி மற்றும் கர்நாடகா உள்பட பல இடங்களில் உள்ள பன்முக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். "மேக் இன் இந்தியா" என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்த பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
ஜி20 உச்சி மாநாட்டுக்கான 11 ஹோட்டல்கள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பாத்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு ஹோட்டல்கள் அவற்றின் தனித்துவமான மெனுக்களின் அடிப்படையில் தங்களுடைய பாத்திர வடிவமைப்புகளை உள்ளோம். இதனை தயாரிக்க அதிக நேரமும், கலை நுட்பமும் தேவையானதாக இருந்தது.
இதற்கு முன்பு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்தபோது அவருக்கான விருந்தில் எங்களின் பாத்திரங்கள் இடம்பெற்றன. அதில் அவர் ஈர்க்கப்பட்டார். மேலும் சில பாத்திரங்களை அவர அமெரிக்காவுக்கு எடுத்து சென்றார்'' என பெருமையுடன் தெரிவித்தார்.
-
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications