ஜி 20 உச்சி மாநாடு: அணு ஆயுத அச்சுறுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது.. வெளியிடப்பட்ட கூட்டறிக்கை
டெல்லி: ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், அணு ஆயுத அச்சுறுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு இன்று தொடங்கியது. நாளை வரை இந்த மாநாடு தலைநகர் டெல்லியில் நடக்கிறது. கடந்த ஆண்டு இந்தோனேசியா தலைமை வகித்த நிலையில், நடப்பு ஆண்டில் ஜி 20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகிக்கிறது. இதன் காரணமாக உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லி வந்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாது பிரதமர் ரிஷி சுனக், சிங்கப்பூர் பிரதமர், இந்தோனேசிய அதிபர், கனடா பிரதமர் உள்பட பல தலைவர்கள் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட ஜி20 தலைவர்கள், பிரதிநிதிகள் தங்குவதற்கு டெல்லியில் உள்ள சொகுசு ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் உலகத் தலைவர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கவும், இந்தியாவின் செழுமைமிக்க கலாசாரத்தை அவர்களுக்கு காட்டவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாட்டின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
உலக வர்த்தக அமைப்புகளுடன் இணைந்து பலமுனை வணிக கட்டமைப்பு ஏற்படுத்துவது இன்றியமையாதது. நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மையை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும். உக்ரைன் போர் விளைவாக உலகளவில் உணவு, எரிசக்தி பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தற்போதைய காலக்கட்டம் போர்க்கானது அல்ல. உக்ரைனில் அமைதி நீடிக்க வேண்டும். அணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாது. உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் வளர்ச்சியடைந்த மற்றும் குறைந்த அளவு வளர்ந்த நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்!












Click it and Unblock the Notifications