3 நாள் பயணமாக இன்று தென்னாப்பிரிக்காவுக்கு செல்லும் பிரதமர் மோடி - ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார்
டெல்லி: ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 21 ஆம் தேதி) தென்னாப்பிரிக்கா நாட்டுக்குச் செல்கிறார். இந்த ஜி20 மாநாட்டின் மூன்று முக்கிய அமர்வுகளிலும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் நவம்பர் 21 முதல் 23 ஆம் தேதி வரை ஜி20 நாடுகளின் தலைவர் பங்கேற்கும் 20 ஆவது ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 21) தென்னாப்பிரிக்காவுக்குச் செல்கிறார். இந்த ஜி20 மாநாட்டின் மூன்று முக்கிய அமர்வுகளிலும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். இதில், காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் உரையாற்றவுள்ளார்.
இதைத்தொடர்ந்து, நவம்பர் 23 ஆம் தேதி வரையிலான பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தில், இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா தலைமையில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர், கனடா பிரதமர் மார்க் கார்னி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications