மோடி பங்கேற்ற AI மாநாட்டில் சீன ரோபோ.. இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ! நெட்டிசன்கள் ஷாக்
டெல்லி: டெல்லியில் 'இந்தியா AI இம்பாக்ட் சமிட் 2026' எனும் தலைப்பில் ஏஐ மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உட்பட தலைவர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். இதில் சீன தயாரிப்பு ரோபோட் நாய் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக இந்த ரோபோட்டை தாங்கள்தான் உருவாக்கினோம் என இந்திய பல்கலைக்கழகம் தரப்பில் உரிமை கோரப்பட்டிருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேரான நிலையில், பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளன. இதற்கு பல்கலைக்கழகம் அளித்த விளக்கமும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

ஏஐ மாநாடு
அதாவது, டெல்லியின் பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு பிப்.16 அன்று தொடங்கியது. 5 நாட்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டின் ஒரு பகுதியாக 'இந்தியா AI எக்ஸ்போ 2026' எனும் கண்காட்சி தொடங்கியது. மோடிதான் இதனை தொடங்கி வைத்தார். இதில்தான் சீன ரோபோட் நாய் காட்சிப்படுத்தப்பட்டது.
ரோபோட் நாய்
இதனை 'கல்கோடியாஸ்' பல்கலைக்கழகம் காட்சிப்படுத்தியிருந்தது. இந்த ரோபோட் நாய்க்கு 'ஓரியன்' என பெயரிடப்பட்டிருந்தது. இது குறித்து பல்கலைக்கழகத்தின் சிறப்பு மையத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஊடகத்திற்கு அளித்திருந்த பேட்டிதான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய தயாரிப்பு
அவர் பேசியதாவது, "நாங்கள் இங்கே ஓரியன் என்கிற ரோபோவை காட்சிப்படுத்தியிருக்கிறோம். இது எங்கள் பல்கலைக்கழகத்தின் 'center of excellence' குழுவினரால் முழுமையாக உருவாக்கப்பட்டது. இது ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இதில் சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் மனிதர்களை பின் தொடரவும், அவர்கள் கொடுக்கும் கட்டளைகளை ஏற்கவும் முடியும். இது முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது" என பேசியிருந்தார்.
சீன ரோபோ நாய்
இந்த வீடியோதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், இந்த ரோபோவை தயாரித்தது சீனாவை சேர்ந்த 'unitree' எனும் நிறுவனம். இந்த ரோபோட்டின் பெயர் 'Unitree GO2'. இதன் விலை ரூ.2-3 லட்சம் வரை வருகிறது. இந்த தகவல்களை நெட்டிசன்கள் சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்து இந்தியாவின் மானம் காற்றில் பறக்கிறது என கவலை தெரிவித்து வருகின்றனர்.
பல்கலையின் விளக்கம்
உண்மை வெளியானதால், நெருக்கடிக்கு உள்ளான பல்கலைக்கழகம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்தது. அதில், "இந்த ரோபோவை நாங்கள் உருவாக்கியதாக உரிமை கோரவில்லை. இது மாணவர்களின் கற்றலுக்காக 'Unitree' நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்ட கருவி. இதன் செயல்பாடுகளை ஆராய்ந்து, புதிய தொழில்நுட்பங்களை கற்க இது பயன்படுகிறது. புதுமைக்கு எல்லை கிடையாது உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதே எங்கள் நோக்கம்" என தெரிவித்திருக்கிறது.
உண்மை என்ன?
பல்கலைக்கழகத்தின் இந்த விளக்கத்தை டிவிட்டர் தளத்தின் கம்யூனிட்டி நோட் மறுத்துள்ளது. ரோபோட் காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியில், அதை தாங்கள்தான் உருவாக்கினோம் என பல்கலைக்கழகம் தரப்பில் உரிமைக் கோரப்பட்டதை ஆதாரங்களுடன் டிவிட்டர் சுட்டிக்காட்டியிருக்கிறது.
வெளிநாட்டு தயாரிப்புகளை வாங்குவது இயல்பான ஒன்றுதான். அதில் தவறு கிடையாது. ஆனால், அந்நாட்டு தயாரிப்புகளை தங்களுடையது என்று உரிமை கோருவதுதான் தவறு என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications