டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகாத்மா காந்திக்கு பிடித்த பாடல் குடியரசு தினவிழாவில் இருந்து நீக்கம்-மீண்டும் சர்ச்சை, காரணம் என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி : குடியரசு தின விழாவின் இறுதி நிகழ்ச்சியாக படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சியின்போது இசைக்கப்படும் காந்தியடிகளுக்கு பிடித்தமான பாடல் இந்த ஆண்டு மீண்டும் நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் குடியரசுதினவிழாவை மத்திய அரசு சிதைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா இந்தியாவில் கொண்டாடப்படுகிறது அப்போது நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு கிராமியக் கலைஞர்களை நடனமும் அலங்கார ஊர்தி ஊர்வலமும் இந்திய ராணுவத்தினரின் பெருமையை பறைசாற்றும் படைப்பிரிவு அணிவகுப்பு நடைபெறும்.

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம்- 5 நாட்கள் நடத்த முடிவு!இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம்- 5 நாட்கள் நடத்த முடிவு!

தொடர்ந்து குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்ததும் ஜனவரி 29ஆம் தேதி படகை கரைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

காந்திக்கு பிடித்த பாடல்

காந்திக்கு பிடித்த பாடல்

குடியரசு தின விழாவை போலவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் பேண்டு வாத்திய கலைஞர்கள் பிகில் வாசிப்பாளர்கள் டிரம்பட் கலைஞர்கள் மற்றும் ட்ரம்மர்கள் விண்ணதிர கலந்துகொண்டு இசைக்கருவிகளை இசைத்தபடி பாசறைக்கு திரும்புவது வழக்கம். அப்போது நாட்டின் தேச பிதாவாக கருதப்படும் மகாத்மா காந்திக்கு விருப்பமான "என்னோடு இருங்கள்" எனப்படும் abide with me என்ற இசைக் கலைஞர்களால் இசைக்கப்படுவது வழக்கம் 1950 ஆம் ஆண்டு முதலே இந்த நடைமுறையானது பாரம்பரியமாக அமலில் உள்ளது.

பாடல் நீக்கம்

பாடல் நீக்கம்

இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசுதினவிழா படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்வில் மகாத்மா காந்திக்கு விருப்பமான என்னோடு இருங்கள் பாடல் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி பிரான்சிஸ் லைட் என்பவர் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த போது உயிர் பிரியும் வேதனையில் 1847ஆம் ஆண்டில் என்னோடு இருங்கள் பாடலை எழுதியதாகவும் மகாத்மா காந்திக்கு இந்த கிறிஸ்தவ பாடல் மிகவும் பிடித்ததாகவும் அவரது சத்திய சோதனைகள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சாரே ஜஹான் சே பாடல்

சாரே ஜஹான் சே பாடல்

இந்த நிலையில் தற்போது இந்தப்பாடல் நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையில் உள்ள நிலையில், இந்தியக் கவிஞர் முகமது இக்பால் எழுதிய சாரே ஜஹான் சே அச்சா என்ற பாடல் இசைக்கபட உள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.

எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

கடந்த 2020 ஆம் ஆண்டு காந்தியடிகளுக்கு பிடித்த இந்தப்பாடல் நீக்கப்பட்டபோது கடும் எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து 2020 ஆம் ஆண்டு இந்த பாடல் மீண்டும் இடம்பெற்றது. தற்போது இந்த பாடலை மத்திய அரசு மீண்டும் நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது இது குடியரசுதினவிழா வைக்கும் நிகழ்வு என எதிர்க்கட்சிகள் வருகின்றன.

English summary
Gandhiji's favorite song to be played during the return of the troops to the finals of the Republic Day celebrations has been deleted again this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X