டெல்லி ரயில் நிலையத்தில் கொடூரம்.. ரயில்வே ஊழியர்களால் இளம்பெண் கூட்டு வன்புணர்வு.. 4 பேர் கைது
டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த 2020ம் ஆண்டைவிட 2021ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் 21.6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் காவல்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது 4 ரயில்வே ஊழியர்களால் பெண் ஒருவர் ரயில் நிலையத்திலேயே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் 2 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போலீஸ் துணை ஆணையர் ஹரேந்திர குமார் சிங் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை குற்றங்கள்
இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்கள் சுமார் 70 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பொது சுகாதார அறக்கட்டளையின் அறிக்கை தெரிவித்துள்ளது. அதேபோல 2012 மற்றும் 2018க்கு இடைப்பட்ட காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் ஆண்டு அறிக்கை குறிப்பிடுகிறது.
2001 முதல் 2018 வரை இந்தியாவில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 15,97,466 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. 2001 இல் 59,945ஆக பதிவான இந்த வழக்குகள் 2018 இல் 1,33,836ஆக அதிகரித்துள்ளன. தேசிய தலைநகர் டெல்லியில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

டெல்லி
இந்நிலையில் தற்போது 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் டெல்லி ரயில் நிலையத்தில் உள்ள மின் பராமரிப்பு ஊழியர்களுக்கான குடிசையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் டெல்லி பரிதாபாத்தை சேர்ந்தவராவார். இவர் ஏற்கெனவே திருமணம் செய்த நிலையில் தனது கணவரை விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடி வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் குமார் என்பவர் தான் ரயில்வே துறையில் பணியாற்றுவதாகவும், எனவே உங்களுக்கும் பணியை பெற்று தருகிறேன் என்று கூறி பெண்ணுடன் நட்பை ஏற்படுத்திகொண்டுள்ளார். இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். இதை பயன்படுத்திக்கொண்ட சதீஷ் குமார் தனது குழந்தையின் பிறந்தநாள் மற்றும் தான் புது வீடு வாங்கியுள்ளதற்கும் சேர்த்து ட்ரீட் தருவதாக கூறி சம்பவத்தன்று இரவு அழைப்பு விடுத்துள்ளார்.

ரயில் நிலையம்
அழைப்பை ஏற்று இரவு 10.30 மணிக்கு கிர்த்தி மெட்ரோ ரயில் நிலையம் வந்த பெண்ணை சதீஷ் குமார் டெல்லி ரயில் நிலையத்திற்கு வரவழைத்துள்ளார். பின்னர் 8-9 நடைமேடைகளுக்கு இடையில் உள்ள ஒரு குடிசையில் இருக்குமாறு கூறியுள்ளார். இது மின்சார ஊழியர்களுக்கான ஓய்வு அறையாகும். பின்னர் அங்கு வந்த சதீஷ் குமாரின் நண்பர்கள், இருவர் வெளியில் இருக்க சதீஷ் குமாரும் மற்றொரு நண்பரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து தப்பிய பெண் ரயில் நடைமேடைக்கு வந்து காவலர்களை தேடியுள்ளார். பின்னர் அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ரயில்வே காவல்துறைக்கு போன் செய்துள்ளார். அப்போது பணியில் இருந்த அதிகாரி ஒரு பெண் காவலரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டுள்ளனர்.

கைது
இதனையடுத்து அடுத்த இரண்டு மணி நேரத்தில் முக்கிய குற்றவாளியான சதீஷ் குமார், வினோத் குமார்(38), மங்கள் சந்த் மீனா(33), மற்றும் ஜெகதீஷ் சந்த்(37) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போலீஸ் துணை ஆணையர் ஹரேந்திர குமார் சிங் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நால்வரும் ரயில்வே மின்சாரத்துறையில் பணியாளர்களாவார்கள். இந்த சம்பவத்தையடுத்து அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய தலைநகரில் எப்போதும் பரபரப்பாக இயங்கும் ரயில் நிலையத்திலேயே பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications