புதுமை, தற்சார்புடன் தேசத்தை கட்டமைக்க வேண்டும்: ஐஐடி நிகழ்ச்சியில் கவுதம் அதானி வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐஐடி காரக்பூரில் நடந்த பவள விழா நிகழ்வில் பேசிய தொழில் அதிபர் கவுதம் அதானி, மாணவர்கள் 'புதிய சுதந்திரப் போராளிகளாக' மாற வேண்டும் என்றும், கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பு தேவை என்றும் கூறினார். புதுமை, தற்சார்புடன் தேசத்தை கட்டமைக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஐஐடி காரக்பூரில் நடந்த பவள விழா நிகழ்வில், இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான கவுதம் அதானி கலந்து கொண்டு பேசினார். இந்தியாவின் தொழில் நுட்ப பயணத்தை இரண்டாவது சுதந்திரப் போராட்டமாக விவரித்த கவுதம் அதானி, இந்த பயணம் புத்தாக்கம் (இனோவேஷன்) மற்றும் தன்னம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்றார்.

gautam-adani-at-iit-kgp-driving-bharat-s-growth-through-innovation-and-self-reliance

சுதந்திரப் போராளிகளாக மாற வேண்டும்

மாணவர்கள் 'புதிய சுதந்திரப் போராளிகளாக' மாற வேண்டும் என்றும், கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். 1930-களில் திரிதிப் குமார் சவுத்ரி போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிறைவைக்கப்பட்ட காரக்பூர் ஹிஜ்லி சிறையின் பாரம்பரியத்தை அதானி தனது உரையில் நினைவு கூர்ந்தார். கவுதம் அதானி மேலும் கூறியதாவது:-

1947-ல் காலனி ஆதிக்கச் சங்கிலிகளை இந்தியா உடைத்தெறிந்தாலும், இறக்குமதி செய்யப்பட்ட குறைக்கடத்திகள், வெளிநாட்டு எண்ணெய், எல்லை தாண்டிய தரவுப் பரிமாற்றங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் போன்ற புதிய சார்புநிலைகள் இன்றும் தொடர்கிறது. இன்றைய போர்கள் கண்ணுக்குத் தெரியாதவை. அவை அகழிகளில் அல்ல, சர்வர் பண்ணைகளில் நடக்கின்றன. ஆயுதங்கள் துப்பாக்கிகள் அல்ல, அல்காரிதம்கள். சாம்ராஜ்யங்கள் நிலத்தில் அல்ல, தரவு மையங்களில் கட்டமைக்கப்படுகின்றன.

ஆழமான ஒத்துழைப்பு தேவை

எனவே, புதுமை, குறியீடு, மற்றும் புதிய யோசனைகளே இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் நவீன கால ஆயுதங்கள்" என்று பேசினார். மேலும், செயற்கை நுண்ணறிவு குறித்து பேசிய அதானி, ஏஐ (AI) ஆதிக்கம் செலுத்தும் உலகில், விலை அனுகூலங்கள் மறைந்துவிடும் என்றும், அறிவுசார் சொத்துரிமை மற்றும் பெரிய அளவிலான கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் சிறந்து விளங்கும் நாடுகள் மட்டுமே வெற்றி பெறும் என்றும் அவர் எச்சரித்தார்.

பட்டதாரிகளை மட்டும் உருவாக்குவதைத் தாண்டி, இந்தியாவை மேம்படுத்துவதற்குத் தேவையான 'புத்திசாலித்தனமான தேசபக்தர்களை' உருவாக்க கல்வி நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்திய நிறுவனங்கள் புதுமைகளில் பின்தங்கிவிட்டதை ஒப்புக்கொண்ட அதானி, பல்கலைக்கழகங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையே ஆழமான ஒத்துழைப்பு தேவை என்றார்.

முடிவெடுப்பதில் வேகம்

மேலும், "பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும், நிறுவனங்கள் அவற்றை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.. ஒன்றாக நாம் தாக்கத்தை உருவாக்க வேண்டும்" எனக்கூறிய அதானி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், துறைமுகங்கள், தளவாடங்கள் மற்றும் ஸ்மார்ட் விமான நிலையங்கள் போன்ற முக்கிய திட்டங்களில் ஐஐடி திறமைகளை ஈடுபடுத்த 'அதானி-ஐஐடி பவள விழா சேஞ்ச் மேக்கர்ஸ் பெல்லோஷிப்' திட்டத்தையும் அறிவித்தார்.

மும்பையில் 16 வயதில் வைரச் சுத்திகரிப்பாளராகத் தொடங்கி, இந்தியாவின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு நிறுவனத்தை உருவாக்கிய தனது பயணத்தையும் மாணவர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்ட அதானி, இடர்பாடுகளை ஏற்றுக்கொள்வது, முடிவெடுப்பதில் வேகம், செயல்முறைகளை முழுமையாகக் கட்டுப்படுத்துதல் மற்றும் உண்மையான சொத்துக்களை உருவாக்குதல் ஆகியவை தனது வழிகாட்டும் தத்துவங்கள் என்று குறிப்பிட்டார்.

நான்கு கொள்கைகள்

முந்திரா துறைமுகம் முதல் கவ்டா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்கா மற்றும் அதானி விமான நிலையங்கள் வரை, ஒவ்வொரு முயற்சியும் தனது தொழில்முனைவு மற்றும் இந்தியாவின் அசைக்க முடியாத வளர்ச்சி மீதான நம்பிக்கையிலிருந்து உருவானது எனவும் அதானி நெகிழ்ச்சியுடன் கூறினார். தொடர்ந்து பேசிய அதானி, சிறந்த பாரதத்தை உருவாக்குவதற்கான நான்கு கொள்கைகளை மாணவர்களுக்கு முன்வைத்தார்.

* யோசனைகள் மற்றும் புதுமைகளை ஆயுதங்களாகக் கொண்ட புதிய சுதந்திரப் போராளிகளாக இருங்கள்.
* உலக சந்தைகளுக்கு முன்பாக, மீனவர்கள், விவசாயிகள் மற்றும் குடிமக்களுக்கான தீர்வுகளை உருவாக்குங்கள்.
* உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துரிமையில் தேசிய அடித்தளங்களை வலுப்படுத்துங்கள்.
* கல்வி, தொழில் மற்றும் அரசு ஆகியவை இணைந்து ஒரு அணியாக செயல்படுங்கள்

மாணவர்களுக்கு ஒரு சவால் ஒன்றையும் வைத்த அதானி, "விரைவில் உங்கள் கைகளில் இரண்டு டிக்கெட்டுகள் இருக்கும். ஒன்று வசதியான சம்பளத்திற்கான, மற்றொன்று பாரதத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு மரபு. ஒரே ஒரு ரயில் மட்டுமே தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பெருமையைச் சுமந்து செல்லும். எந்த ரயிலில் செல்வீர்கள்?" என்ற கேள்வியையும் முன்வைத்து தனது உரையை முடித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+