”என்னை செதுக்கியவர்கள்” தாய், மனைவி, பேரப்பிள்ளைகள் பற்றி நெகிழ்ச்சியாக கூறிய கவுதம் அதானி!
டெல்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி, தன்னை செதுக்கிய பெண்கள் குறித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார். தனது வாழ்வையும், மதிப்புகளையும் செதுக்கிய தாய், மனைவி, பேரப்பிள்ளைகள் என பெண்களுக்கு அவர் புகழாரம் சூட்டினார்.
மார்ச் 8 இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்மையின் மகத்துவத்தை போற்றும் விதமாக உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தொழில் அதிபர் கவுதம் அதானி தனது லிங்க்ட்இன் பதிவில், மகளிர் குறித்த உணர்வுபூர்வமாக பதிவிட்டுள்ளார்.

என் மனசாட்சியின் சிற்பிகள்
அதானி கூறுகையில், பெண்களை "என் மனசாட்சியின் சிற்பிகள்" என குறிப்பிட்டுள்ளார். தனது தாயார், மனைவி ப்ரீத்தி அதானி, மருமகள்கள் மற்றும் பேத்திகளின் வழிகாட்டுதலே தனது பொறுப்புணர்வையும் தேசத்தைக் கட்டியெழுப்பும் அணுகுமுறையையும் செதுக்கியதாகத் தெரிவித்தார்.
இளமைக் காலத்தில் தாயாரிடமிருந்து கிடைத்த வாழ்க்கை பாடங்களை அதானி நினைவு கூர்ந்துள்ளார். இந்திய இதிகாசங்களையும் அவற்றில் பொதிந்துள்ள தத்துவங்களையும் தனது தாயார் தனக்கு அறிமுகப்படுத்தினார் என்றும் பாடப்புத்தகங்களை விட ஆழமான பல படிப்பினைகளை அந்த கதைகள் கொண்டிருந்தன. துணிச்சல், தியாகம், கடமை, நம்பிக்கை போன்ற நீடித்த கருத்துக்களை அவை எனக்குள் விதைத்தன.
என்னுடைய 16-வது வயதில் வாய்ப்புகளை தேடி மும்பைக்கு சென்றேன். இது தனது இளமைப் பருவத்தில் நடந்த முக்கிய நிகழ்வாகவும். நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி புறப்பட்டபோது, தாயாரிடம் இருந்து துணிச்சலை எடுத்துக்கொண்டதாக கூறியுள்ளார். மேலும் தனது மனைவி ப்ரீத்தி அதானிக்கும் அவர் நன்றி தெரிவித்தார். அவர் ப்ரீத்தி அதானியை "என் மனசாட்சியின் காவலர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ப்ரீத்தி அதானியின் அர்ப்பணிப்பு
தகுதிவாய்ந்த பல் மருத்துவரான ப்ரீத்தி அதானி, அதானி அறக்கட்டளையை உருவாக்குவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இந்தியாவில் 22 மாநிலங்களில் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இந்த அறக்கட்டளை உதவுகிறது. கல்வி, சுகாதாரம், நிலையான வாழ்வாதாரங்கள் மற்றும் சமூக மேம்பாடு போன்ற துறைகளில் அதானி அறக்கட்டளை திட்டங்களைச் செயல்படுத்துகிறது.
இது சமூகத்திற்கு ஒரு பெரிய அளவிலான பங்களிப்பைச் செய்து வருகிறது. ப்ரீத்தி அதானியின் அர்ப்பணிப்பு இந்த அறக்கட்டளையின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. தனது மருமகள்கள் பரிதி அதானி மற்றும் திவா ஷா ஆகியோர் பற்றியும் கௌதம் அதானி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதானி கூறுகையில், "பரிதியை சிறந்த சிந்தனையாளரும் கூர்மையான வழக்கறிஞருமாக உள்ளார். அவர் பல்வேறு விஷயங்களில் ஆர்வம் கொண்டவர். திவாவை ஒரு கற்பனைத்திறன் கொண்ட வடிவமைப்பாளராக உள்ளார்" என்று பாராட்டி பேசினார்.
பேத்திகளுடன் இருக்கும் போது
குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவளிப்பதில் அளவுகடந்த இரக்கம் காட்டினார் என்று குறிப்பிட்டுள்ளார். தனது மூன்று பேத்திகள் கொண்டு வரும் மகிழ்ச்சியைப் பற்றியும் அதானி அதில் குறிப்பிட மறக்கவில்லை. அதானி கூறுகையில், பேத்திகளுடன் இருக்கும் போது, நிர்வாகக் குழு விவாதங்களின் தீவிரத்தன்மையை தளர்த்துகின்றன.
ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுள்ள பொறுப்பை அவர்கள் நினைவுபடுத்துகிறார்கள். துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், வணிகங்களை உருவாக்குவதில் வாழ்நாள் முழுவதும் ஒருவர் ஈடுபடலாம். ஆனால் குடும்பத்தினருடனான தருணங்கள் ஆழ்ந்த நோக்கத்தை அளிக்கும் என்று அதானி எடுத்துரைத்தார்.
தன் வாழ்வையும் வாழ்க்கை பற்றிய பார்வையையும் வடிவமைத்த பெண்களுக்கு நன்றியைத் தெரிவித்த அதானி, "வாழ்வின் வலிமையான அடித்தளங்கள் கான்கிரீட் அல்லது எக்குவால் கட்டப்படுவதில்லை, நம்மை வடிவமைக்கும் மனிதர்களால் உருவாக்கப்படுகின்றன" என்று பதிவிட்டுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications