கவுதம் கம்பீர் மீது வழக்குப் பதிவு.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
டெல்லி: டெல்லி கிழக்கு தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் மீது வழக்குப் பதிவு செய்ய, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து டெல்லி கிழக்கு, லோக்சபா தொகுதியில் போட்டியிட பாஜக அவருக்கு வாய்ப்பு வழங்கியது.

தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார் கம்பீர். கடந்த 25ம் தேதி, டெல்லியின் ஜன்க்புரா பகுதியில், இவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால், இதற்காக தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி அனுமதி பெறவில்லை.
இது தேர்தல் விதிமுறை மீறல் என்பதால், தேர்தல் ஆணையத்திடம் புகார் சென்றது. இதை விசாரித்த தேர்தல் ஆணையம், கவுதம் கம்பீர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு, கிழக்கு டெல்லி தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.
கிழக்கு டெல்லி சிட்டிங் எம்பியான பாஜகவின் மகேஷ் கிரிக்கு பதிலாக கம்பீருக்கு பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் மேகேஷ் கிரி, ஆம் ஆத்மி வேட்பாளர் ராஜ்மோகன் காந்தியைவிட கடந்த தேர்தலின்போது, 190,400 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications