டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கைது செய்தவர்களை ரிலீஸ் பண்ணுங்க...அப்புறம் பேசலாம்...விவசாய சங்கத்தினர் கோரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி : டெல்லியில் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்து, பேச்சுவார்த்தைக்கு ஏற்ற சுமூக சூழலை ஏற்படுத்துமாறு பிரதமர் மோடியை விவசாய சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வேளாண் சட்டங்களை 12 முதல் 18 மாதங்களுக்கு அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள சம்யுக்தா கிசான் மோர்சா அமைப்பினர், மரியாதையான தீர்வு என்றால் ஏற்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் தினிக்கப்படும் எதையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

 Ghazipur farmers protest gets new life, hundreds flock to Delhi, mahapanchayats held in UP

இதே போன்று, நேற்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, குடியரசு தினத்தன்று தேசியக் கொடி அவமதிக்கப்பட்டது நாட்டையே வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது என்றார். இதற்கு பதிலளித்துள்ள விவசாய சங்க தலைவர்களான ராகேஷ் மற்றும் நரேஷ் திகாத் ஆகியோர், போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டவர்களை அரசு முதலில் விடுவித்து, பேச்சவார்த்தையை தொடர்வதற்கான சுமூக சூழலை ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.

டில்லியின் சிங்கு எல்லை பகுதியிலும் ஏராளமான விவசாயிகள் குவிந்து வருகின்றனர். பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்த விவசாயிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அதிக அளவில் வந்து கொண்டுள்ளனர். மோசமான இணையதள வேகத்தால் தாங்கள் குடிநீர், உணவு பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.

வேளாண் சட்டங்கள் விவகாரம், வரும் தேர்தல்களில் பாஜக.,வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் விவசாய சங்கத்தினர் எச்சரித்து வருகின்றனர். விவசாயிகள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடட்டும். எந்த கட்சிக்கும் ஓட்டு போட சொல்லி நாங்கள் கேட்க மாட்டோம். ஆனால் எங்களை பாதிக்கும் ஒரு கட்சி எதற்காக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டில்லியின் சிங்கு எல்லை பகுதியிலும் ஏராளமான விவசாயிகள் குவிந்து வருகின்றனர். பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்த விவசாயிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அதிக அளவில் வந்து கொண்டுள்ளனர். மோசமான இணையதள வேகத்தால் தாங்கள் குடிநீர், உணவு பெருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.

உ.பி., காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டில்லி துணை முதல்வரான மணிஸ் சிசோடியா, ஆர்எல்டி தலைவர்கள், இந்திய தேசிய லோக் தல் கட்சி தலைவர்கள் போராட்டப் பகுதிக்கு நேரில் சென்று தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

English summary
Farmer leaders Rakesh and Naresh Tikait demanded that the government release the protesters to create a conducive environment for talks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X