தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணர் குழுவில் கிரிஜா வைத்தியாநாதன், சத்யகோபால்.. மாத ஊதியம் ரூ.2,25,000!
டெல்லி: தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணர் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கிரிஜா வைத்தியாநாதன், சத்யகோபால் ஆகியோர் உள்பட 3 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.2,25,000 என நிர்ணயம் செய்துள்ளது மத்திய அரசு.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் தலைமைச் செயலாளராக ராம்மோகன ராவ் இருந்தார். 2016ல் தலைமைச் செயலக அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பொறுப்பில் இருந்து அதிரடியாக அவர் மாற்றப்பட்டார். அதன்பிறகு தமிழக தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். அவர் 2019ம் ஆண்டு ஜூன் மாதம் வரை பொறுப்பில் இருந்தார். அதன்பிறகு அவர் ஓய்வு பெற்றார்.

4 ஆண்டுகள் பதவி காலம்
இந்நிலையில், மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர்களாக மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது. அதில், தமிழகத்தை சேர்ந்த கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் வருவாய் ஆணையர் கே.சத்யகோபால் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இவர்களின் பதவிக் காலம் 4 ஆண்டுகள் ஆகும்.

ஐஏஏஸ் அதிகாரிகள்
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு டெல்லியில் செயல்பட்டு வருகிறது. இதுதவிர சென்னையில் தென் மண்டல பசுமை தீர்ப்பாயமும், மேலும் 3 இடங்களில் பசுமை தீர்ப்பாய கிளையும் செயல்பட்டு வருகிறது. பொதுவாக தேசிய பசுமை தீர்ப்பாய கிளைகளில் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி நீதித்துறை உறுப்பினராகவும், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.எப்.எஸ். அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் நிபுணர் குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படுவது வழக்கம்.

சத்யகோபால் நியமனம்‘
அதன்படி தான் தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பேரிடர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்யகோபால் ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

எவ்வளவு ஊதியம்
இவர்களுடன் ஐ.எப்.எஸ். அதிகாரியான அருண் குமார் வர்மா என்பவரும் பசுமை தீர்ப்பாய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கான துறை பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை இவர்கள் மூவரையும் நியமித்துள்ளது. இவர்களுக்கு மாத சம்பளம் 2,25,000 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications