உலக அளவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலக நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 12,05,043 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் மீண்டும் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,68,04,127 உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,37,42,368 ஆகும்.

coronavirus

கொரோனாவால் உலகம் முழுவதும் 12,05,403 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளில் அமெரிக்காவில்தான் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 70,999 பேருக்கு புதியதாக கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,73,589 ஆக உயர்ந்துள்ளது.

உலகில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமையன்று மட்டும் 46,441 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 82,29,322. 3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55,45,705,

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சத்தை தொட்டு வருகிறது. பிரான்ஸில் ஒருநாளில் 46,290 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இங்கிலாந்தில் 23,254; இத்தாலியில் 29,907; பெல்ஜியத்தில் 16,915 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் அமெரிக்காவில்தான் அதிகம். அமெரிக்காவில் இதுவரை 2,36,471 பேர் கொரோனாவால் மாண்டு போயினர். 2-வதாக பிரேசிலில் 1,60,104 பேரும் 3-வதாக இந்தியாவில் 1,22,642 பேரும் கொரோனாவால் பலியாகினர். மெக்ஸிகோவில் 91,753 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

கொரோனா பாதிப்பு தொடங்கிய போது டாப் 10 நாடுகள் பட்டியலில் ஐரோப்பிய நாடுகள் இருந்தன. பின்னர் அங்கு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் 2-வது கொரோனா அலைதாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் உலகின் மொத்த கொரோனா பாதிப்பு நாடுகளில் 5-வது இடத்தில் பிரான்ஸ், 6-வது இடத்தில் ஸ்பெயின் நாடுகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+