ஜிமெயில்... யூடியூப்...கூகுள் ட்ரைவ்... சேவை உலகம் முழுவதும் பாதிப்பு!!
டெல்லி: இந்தியாவில் ஜி மெயில் சேவை சிலருக்கு முடங்கியது. உலகம் முழுவதும் இந்தப் பிரச்சனை நீடித்து வருகிறது. சிலருக்கு மட்டுமே இந்த சேவை கிடைத்து வருகிறது. சிலருக்கு பிரச்சனை இருந்து வருவதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
பலரும் தங்களது பதிவில், இமெயில் அனுப்ப முடியவில்லை ஆவணங்களும் இணைக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இந்த தகவல் டிரண்ட் ஆனது.

இன்று காலை முதல் ஜி மெயில் சேவை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டது. இதன் பாதிப்பு யூடியூப், கூகுள் டிரைவ் உள்ளிட்ட கூகுள் சேவைகளிலும் எதிரொலித்தது. இதனால் காலை நேரத்தில் முக்கிய வேலைகளை தங்களால் செய்து கொள்ள முடியாமல் பலரும் தவித்தனர். சமூக வலைதளங்களில் தங்களது பிரச்சனைகளை பதிவிட்டனர். சிலர் மெயில் லாக் இன் செய்ய முடியவில்லை என்றும், சிலர் ஆவணங்களை இணைக்க முடியவில்லை என்றும் பதிவிட்டு இருந்தனர்.
சிலர் மட்டுமே தங்களுக்கு இந்த பிரச்சனை இருப்பதாகவும், சிலர் தங்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை என்றும் பதிவிட்டு இருந்தனர். பலரும் தற்போது வீட்டில் இருந்து வேலை செய்வதால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். இதன் நீட்சியாக இதன் பாதிப்பு, கூகுள் டிரைவ், யூடியூப் ஆகியவற்றிலும் பிரதிபலித்தது என்று சிலர் பதிவிட்டு இருந்தனர். கூகுள் டிரைவில் ஆவணங்களை இணைக்க முடியவில்லை என்று சிலர் குறிப்பிட்டு இருந்தனர். இந்தியாவிலும் இந்த பாதிப்பு இருந்தது.
இதற்கு பதில் அளித்து இருந்த ஜி சூட் நிறுவனம், ''இதுகுறித்து விசாரித்து வருகிறோம் 8/20/20, மதியம் 1:39 மணிக்கு இதுகுறித்த தகவலையும், எப்போது சரி செய்யப்படும் என்ற தகவலையும் தெரிவிப்போம்'' என்று தெரிவித்துள்ளனர். Service interruptionஅல்லது "service outage'' பிரச்சனையாக இருக்கலாம் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சனை இன்று காலை 11 மணிக்கு துவங்கியதாக பதிவிடப்பட்டுள்ளது. சிலருக்கு மெயில்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலகின் எந்தெந்த பகுதிகளில் இந்த சேவை பாதிக்கப்பட்டது என்பதைக் காட்டும் வரைபடத்தில், ஐரோப்பியாவின் சில பகுதிகள், அமெரிக்கா, இந்தியா, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து என மொத்தம் 42 நாடுகளில் இந்த பாதிப்பு இருப்பதாக காட்டப்பட்டு உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications