டிசம்பரில் ஆபத்து.. பல கோடி பேரின் இமெயில் கணக்கை நீக்கும் கூகுள்! ஏன்? அலர்ட்டா தப்பிப்பது எப்படி
டெல்லி: கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத இ-மெயில் கணக்குகளை நீக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் இதற்கான பணிகள் தொடங்க உள்ள நிலையில் நமதுக்கு இ-மெயில் கணக்குகள் முடக்கப்படாமல் இருக்க செய்ய வேண்டிய விஷயம் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பள்ளி மாணவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை அனைவரும் இ-மெயில் முகவரி வைத்துள்ளோம். இன்னும் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட இ-மெயில் முகவரி வைத்திருப்போம். இதில் பலரும் அனைத்து இ-மெயில் முகவரிகளையும் பயன்படுத்துவது இல்லை.

ஏதாவது ஒன்று அல்லது இரண்டை மட்டுமே நாம் பயன்பாட்டில் வைத்திருப்போம். மற்றவற்றை நாம் பயன்படுத்தாமல் இருப்போம். இப்படி உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் இ-மெயில் கணக்குகளை திறந்து பயன்படுத்தாமல் உள்ளனர்.
மேலும் இ-மெயில் முகவரி வைத்திருக்கும் தினசரி இறந்தும் வருகின்றனர். இதனால் ஏராளமான இ-மெயில் முகவரிக்கு தற்போது பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இத்தகைய இ-மெயில் முகவரிகளை முடக்க உள்ளதாக ஜிமெயிலின் தலைமை நிறுவனமான கூகுள் அறிவித்துள்ளது. அதாவது குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாக சைன்இன் செய்து பயன்படுத்தப்படாமல் உள்ள இமெயில் கணக்குகளை முடக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த செயல்முறை அடுத்த மாதம் (டிசம்பர்) தொடங்க உள்ளது. இது மக்கள் மற்றும் கூகுள் நிறுவனத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதாவது பயன்பாட்டில் இல்லாத இ-மெயில் முகவரிகளை குறிவைத்து மோசடிகள் நடந்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் கூகுள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மேலும் குறிப்பிட்ட இ-மெயில் முகவரி நீக்கப்படும் பட்சத்தில் அதில் இருக்கும் ஆவணங்கள், டிரைவ், மீட், காலண்டர், கூகுள் போட்டோஸ் என அனைத்தும் நீக்கப்பட்டு விடும். மேலும் ஒரு குறிப்பிட்ட இமெயில் கணக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அதனை நீக்கம் செய்வது தொடர்பாக முதலில் கூகுள் அலர்ட் செய்யும். அதன்பிறகே அந்த இ-மெயில் முகவரி நீக்கம் செய்யப்படும்.

அதன்படி அடுத்த மாதம் மட்டம் பல கோடி பேரின் இமெயில் முகவரிக்கும் நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதில் இருந்து நாம் எளிதாக தப்பிக்கலாம். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் நம்மிடம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் இ-மெயில் கணக்கை திறந்து அதில் இருந்து சில இ-மெயில்களை பிறருக்கு அனுப்ப வேண்டும். இப்படி அனுப்பும் பட்சத்தில் அந்த இ-மெயில் கணக்கு நீக்கப்படாமல் தப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications