டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா கண்டறிய சிடி ஸ்கேன் வேண்டாம்.. கேன்சர் ஏற்படும் அபாயம் உள்ளது.. எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தொற்றைக் கண்டறிய மருத்துவர்கள் ஆலோசனையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உருவாக்கும் என எய்ம்ஸ் ரன்தீப் குளோரியா இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    Corona-வை கண்டறிய CT Scan வேண்டாம்!-AIIMS director எச்சரிக்கை | Oneindia Tamil

    இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. வரும் வாரங்களில் கொரோனா 2ஆம் அலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Go for X-ray first, avoid CT scans in mild Covid cases, says AIIMS director Dr Randeep Guleria

    கொரோனா அறிகுறிகள் இருந்தும் RT PCR சோதனைகளில் கொரோனா நெகடிவ் முடிவுகள் கிடைக்கும் சிலர் சிடி ஸ்கேன், ரத்த சோதனை ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். இருப்பினும், மருத்துவர் அறிவுரையின்றி சிடி ஸ்கேன் எடுக்கக் கூடாது என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குளோரியா தெரிவித்துள்ளார்.

    தடுப்பூசி உற்பத்தி சிக்கலான ஒரு செயல்முறை.. ஒரே இரவில் உற்பத்தியை அதிகரிக்க முடியாது..ஆதார் பூனவல்லாதடுப்பூசி உற்பத்தி சிக்கலான ஒரு செயல்முறை.. ஒரே இரவில் உற்பத்தியை அதிகரிக்க முடியாது..ஆதார் பூனவல்லா

    இது குறித்து ரன்தீப் குளோரியா கூறுகையில், கொரோனா அறிகுறி இருந்தும், RT PCR சோதனைகளில் கொரோனா நெகடிவ் முடிவுகள் வரும் சுமார் 40% சிடி ஸ்கேன் எடுக்கிறார்கள். ஆனால் ஒரு சிடி ஸ்கேன் என்பது 300 முதல் 400 எக்ஸ்ரேக்களுக்கு சமம். அதிகப்படியான கதிர் வீச்சு காரணமாக சிடி ஸ்கேன் எடுப்பவர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, இதனால் எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படும் அபயமும் உள்ளது.

    Go for X-ray first, avoid CT scans in mild Covid cases, says AIIMS director Dr Randeep Guleria

    உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தும் நெகடிவ் என முடிவுகள் வந்தால் முதலில் எக்ஸ்ரே எடுங்கள். உங்களுக்கு சிடி ஸ்கேன் தேவையா இல்லையா என்பது குறித்து மருத்துவர் கூறுவார். மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவருக்கு ரத்தப் பரிசோதனை, சிடி ஸ்கேன் போன்றவற்றை எடுக்கத் தேவையில்லை

    லேசான கொரோனா பாதிப்பு உடையவர்களுக்குச் சாதாரண மருந்துகளே போதும் அவர்கள் ஸ்டெராய்டுகளை எடுக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் ஸ்டெராய்டுகள் சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது" என்றார்.

    English summary
    AIIMS director Dr Randeep Guleria about Coronavirus and CT scan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X