தங்கம் விலை 70 ஆயிரத்தை தாண்டுமா? அப்படியே நடக்குதே.. நிபுணர்கள் சொன்னது என்ன?
டெல்லி: கடந்த 1ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 46,720 என விற்பனை ஆன நிலையில் இன்று 48,720 க்கு விற்பனை ஆகி வருகிறது. ஒரே வாரத்தில் சவரனுக்கு 2000 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் தங்கம் விலை குறித்து நிபுணர்கள் சொன்ன தகவலை இங்கே பார்க்கலாம்.
இந்தியா போன்ற நாடுகளில் திருமணம் உள்ளிட்ட அனைத்து சுப காரியங்களுக்கும் தங்கம் வாங்குவதை மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் தங்கத்தின் விலை அதிகரிப்போ.. குறைவோ.. மக்களை நேரடியாக பாதிக்க கூடிய ஒன்றாக இருக்கும். தங்கம் விலை சமீப நாட்களாக தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது.

தற்போது ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,090 ஐ தண்டியுள்ளது. ஒரு பவுன் 48,720 ஆக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.2,200 வரை உயர்ந்து இருக்கிறது. கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் முதல் முறையாக ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6 ஆயிரத்தைக் கடந்தது.. அதேபோல ஒரு சவரனுக்கு ரூ.48,000 கடந்தது.
வல்லுனர்களின் கணிப்பு: தங்கம் வெள்ளி மீதான இறக்குமதி வரியை கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு 14.3 ஆக உயர்த்தியிருந்தது. அமெரிக்காவில் பண வீக்கம் கட்டுக்குள் இருப்பது.. அந்நாட்டில் வட்டி வீதம் குறைக்கப்படாதது உள்ளிட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. அது மட்டும் இன்றி சீனா, ரஷ்யா, உள்ளிட்ட நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கி குவிப்பது போன்றவற்றால்தான் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டு இருக்கிறதாக பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.
தங்கம் விலை இனி குறைய வாய்ப்பு இல்லை.. மேலும் உயரவே வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு பவுன் தங்கம் விரைவில் 50 ஆயிரத்தை தாண்டும் என்றும் நிபுணர்கள் கூறினர். கடந்த ஆண்டு இறுதியில் தங்கம் விலை 2024ல் எப்படி இருக்கும் என்பது பற்றி அத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் கணிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அதில், உலகளாவிய பொருளாதார நிலமை, நிச்சயமற்ற தன்மை, பதட்டமான சூழல் போன்றவற்றால் 2024ல் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.70 ஆயிரம் எட்டக்கூடும்.
கோடக் செக்யூரிட்டீஸ் துணைத் தலைவர்: அதாவது ஒரு கிராம் 7000 ஆக உயரும். என்று இந்திய ரத்தினங்கள் மற்றும் நகை உள்நாட்டு உற்பத்தி கவுன்சில் (ஜிஜேசி) கூறியது. கடந்த ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை ரூபாய். 64,460 ஆக அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. கோடக் செக்யூரிட்டீஸ் துணைத் தலைவரும், கமாடிட்டி ஆராய்ச்சித் தலைவருமான ரவீந்திர ராவ் கூறியதாவது:-
விரைவில் 7 ஆயிரத்தை தாண்டும்: இந்தியா மற்றும் சீனாவில் தங்கம் விலை கடுமையாக உயரும் என்பதால் சில்லறை நகை விற்பனை கடும் சிக்கலை இந்த ஆண்டு சந்திக்கும். ரிசர்வ் வங்கி அதிக அளவு தங்கம் வாங்குவதும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக அமையும். கடந்த சில காலாண்டுகளாக ரிசர்வ் வங்கி தங்கத்தை அதிக அளவு வாங்குவது அதன் தேவையை அதிகரிப்பதாக அமைந்துள்ளது.
மற்றொரு பகக்ம் சீனாவின் பொருளாதார வீழ்ச்சியும் தங்கத்திற்கான தேவை அதிகரித்துள்ளது" என்று கூறியிருந்தார். பொருளாதார நிபுணர்கள் கணித்தபடியே நடப்பு ஆண்டு துவக்கமே தங்கம் விலை ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. எனவே விரைவில் ஒரு கிராம் தங்கம் விலை 7 ஆயிரத்தை தாண்டினாலும் வியப்பதற்கு இல்லை.
-
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications