Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. டிக்கெட் புக்கிங் ஈசியாக போகுது.. ரெடியாகுது சூப்பர் ஆப்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரயில்வே வழங்கும் பல்வேறு சேவைகளை ஒழுங்குப்படுத்தும் விதமாக விரைவில் சூப்பர் ஆப் ஒன்று வர உள்ளது. ரயில் பயணிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் சூப்பர் ஆப் ஒன்றை கொண்டு வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்ய ஐஆர்சிடிசி செயலி உள்ளது. இது போக சில தனியார் செயலிகள் மூலமாகவும் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியும். அதுபோக ரயில்வேயின் பல்வேறு சேவைகளை பெறுவதற்காக தனித்தனியாக ஆப் உள்ளது. எடுத்துக்காட்டாக முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை பெறுவதற்காக தனியாக யுடிஎஸ் என்ற செயலி உள்ளது. பிஎன்ஆர் செக் செய்வதற்கு தனியாக செயலி உள்ளது.

railway super app irctc

இப்படி ரயில்வே சேவைகளை பெறுவதற்காக தனித்தனி செயலியை பயன்படுத்த வேண்டியுள்ளது. இது சில சமயங்களில் பயணிகளுக்கு சற்று சிரமத்தையும் கொடுக்கிறது. உதாரணத்திற்கு முன்பதிவு டிக்கெட் தேவைப்படுபவர்கள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் புக் செய்ய வேண்டும்.. சாதாரண டிக்கெட் எடுக்க வேண்டும் என்றால் தனியாக யுடிஎஸ் செயலிக்கு செல்ல வேண்டும்.

இப்படி ரயில்வேயின் அடுத்தடுத்த சேவைகளை பெற பல்வேறு செயலிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரே செயலியின் கீழ் இதைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "பயணிகளுக்கு தேவையான அனைத்து சேவைகளும் சூப்பர் ஆப்-இல் கிடைக்கும்” என்றார்.

எனினும் இது தொடர்பான வேறு எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. டிக்கெட் புக்கிங், பிஎன்ஆர் ஸ்டேடஸ், ரயில்கள் செல்லும் இடத்தை அறிந்து கொள்வது உள்பட அனைத்து சேவைகளும் ஒரெ செயலியில் கிடைக்கும் என்பதை சூசகமாக அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார். தற்போது ரயில் டிக்கெட்களை புக் செய்யும் போது சில நேரங்களில் பயணிகளுக்கு பணம் எடுக்கப்பட்டுவிடும், ஆனால் டிக்கெட் புக் ஆகாது நிலை உள்ளது.

இது போன்ற தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் இந்த புதிய ஆப் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் ரயில் டிக்கெட் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இந்த செயலியில் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வசதிகளிலும் கூடிய இந்த "சூப்பர் ஆப்" எப்போது பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவல் எதையும் ரயில்வே அமைச்சர் கூறவில்லை.

இதுபோக, ரயில்வே கட்டமைப்புகள் கணிசமான அளவில் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- கடந்த ஆண்டில் 5,300 கிலோ மீட்டருக்கும் நீளமான ரயில்வே டிராக் அமைக்கப்பட்டுள்ளது. இது ஸ்விட்சர்லாந்தின் மொத்த ரயில்வே நெட்வொர்க்கின் நீளமாகும். ரயில்வேயை பொறுத்தவரை 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஆண்டுக்கு 171 விபத்துக்கள் நடைபெற்றன. தற்போது 40 ஆக குறைந்துள்ளது.

இந்த எண்ணிக்கையை மேலும் குறைக்க பல்வேறு கட்டமைப்பு வசதிகளை நாங்கள் செய்து வருகிறோம். சாதாரண பயணிகள் பயணம் செய்யும் வகையில் அம்ரித் பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ஆயிரம் கிலோ மீட்டர் வரையிலான தொலைவுக்கு ரூ.400 - 450 வரை கட்டணம் நிர்ணயிக்கப்படும்” என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+