நண்பர்களுடன் இருப்பதில் மகிழ்ச்சி.. குவாட் அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
டெல்லி: குவாட் கூட்டமைப்பு சார்பாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தின. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, உங்களைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நண்பர்களுடன் இருப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முயற்சிக்காக அமெரிக்க அதிபர் பிடனுக்கு நன்றி கூறுகிறேன், குவாட் அமைப்பு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையின் முக்கியமான தூணாக இருக்கும் என்றார்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் கொண்ட வலுவான கூட்டமைப்புதான் குவாட் (quad). இந்த குவாட் கூட்டமைப்பு நாடுகள் ஒவ்வொரு வருடமும் பல முறை ஆலோசனை கூட்டங்களை நடத்தும். ராணுவ பாதுகாப்பு, கடல்வழி போக்குவரத்து, பொருளாதார உதவி என்று பல விஷயங்களை இந்த நாடுகள் பகிர்ந்து கொள்ளும்.
முக்கியமாக கடற்படை போர் பயிற்சிகளை குவாட் நாடுகள் பலமுறை ஒன்றாக செய்துள்ளது. சீனாவுடன் மோதல் நிலவும் நிலையில் குவாட் கூட்டமைப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இப்படிபட்ட நிலையில் குவாட் கூட்டமைப்பு சார்பாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வரும் மார்ச் 12ம் தேதி ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

மகிழ்ச்சி
இதில் இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசான், ஜப்பான் பிரதமர் யாஸிஷிண்டே சுகா, அமெரிக்க அதிபர் பிடன் ஆகியோர் கலந்து கொண்டனர். இணையவழி மீட்டிங் முறையில் நடந்த இந்த சந்திப்பில், பிரதமர் மோடி பேசுகையில், இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, உங்களைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நண்பர்களுடன் நிகழ்ச்சியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முயற்சிக்காக அமெரிக்க அதிபர் பிடனுக்கு நன்றி கூறுகிறேன்

ஜனநாயகம்
இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளும் ஜனநாயக விழுமியங்களாலும், சுதந்திரமான, திறந்த மற்றும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் மீதான (எங்கள்) உறுதிப்பாட்டினாலும் ஒன்றுபட்டுள்ளது.
இன்றைய நமது நிகழ்ச்சி நிரல் என்பது தடுப்பூசிகள், காலநிலை மாற்றம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்ற பகுதிகளை உள்ளடக்கியதை பற்றியது என்றார். மேலும் குவாட் அமைப்பு உலகளாவிய நன்மைக்கான சக்தியாக அமைகிறது. இந்தியா உலகத்தையே குடும்பமாக கருதுகிறது என்றும் நெகிழ்ச்சியுடன் மோடி பேசினார்.

குவாட் அமைப்பு
அதை தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேயிலா நாட்டு தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, குவாட் அமைப்பு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையின் முக்கியமான தூணாக இருக்கும் என்றார்.

நம்பகமான பங்காளி
இதனிடையே இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா, குவாட் சந்திப்பு குறித்து பேசுகையில், QUAD குழுவிற்கு இந்தியாவின் முழு மனதுடன், உறுதியற்ற ஆதரவைக் கொண்டுள்ளது. இந்தியா உலகளாவிய விநியோகச் சங்கிலியில் நம்பகமான பங்காளியாக உள்ளது, மேலும் தடுப்பூசி விநியோகக்கும் முன்முயற்சியின் கீழ் 70 நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கியதற்காக மற்ற நாட்டு தலைவர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது, என்றார்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications