Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Google Pay: Gpay பணத்துக்கு ஆபத்து.. மக்களே உஷாரா இருங்க.. இல்லைனா மொத்தமா போய்டும்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: யுபிஐ செயலிகளை பயன்படுத்தும்போதும் மோசடியாளர்களிடம் சிக்குவதை தடுக்க மத்திய அரசு Fraud Risk Indicator (FRI) என்ற பாதுகாப்பை உருவாக்கி உள்ளது. இது மோசடியாளர்களின் நம்பரை அடையாளம் கண்டால் அலர்ட் செய்யும். ஆனால் இந்த அமைப்பில் ஜிபே (Gpay) இணையவில்லை. இதனால் ஜி பே பயனாளர்கள் மோசடியாளர்களிடம் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.

தற்போது நம் நாட்டில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் கையில் பணம் வைத்திருப்பது இல்லை. எங்கு சென்றாலும் ஆன்லைனிலேயே பணப்பரிமாற்றம் செய்து வருகின்றனர். குறிப்பாக செல்போனில் இருந்து பணப்பரிமாற்றம் செய்ய அதிகமானவர்கள் யுபிஐ செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

google-pay-yet-to-integrate-the-fri-into-its-payment-system

அந்த வகையில் போன்பே (Phonepe), ஜிபே (Gpay), பேடிஎம் (Paytm) உள்ளிட்ட யுபிஐ செயலிகளை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் மோசடி கும்பல் மக்களை பல்வேறு வகைகளில் குறிவைத்து பணத்தை பறித்து செல்கின்றன. இதனால் வங்கியில் இருந்து பேசுவதாகவோ, யுபிஐ செயலி அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் கூறி யாராவது வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டாமல் கொடுக்க கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் கூட ஒரு தரப்பினர் தொடர்ந்து மோசடி கும்பலில் சிக்கி பணத்தை இழந்து விடுகின்றனர். இப்படியான மக்களை காப்பாற்ற மத்திய அரசுநடவடிக்கை எடுத்தது. அதன்படி மத்திய தொலை தொடர்பு துறை சார்பில் Fraud Risk Indicator (FRI) என்ற அமைப்பை உருவாக்கியது. இது செல்போன் எண்ணை அடையாளம் கண்டு நிதி மோசடியுடன் தொடர்புடைய நம்பராக இருந்தால் அலர்ட் செய்யும். இதன்மூலம் பொதுமக்கள் உஷாராகி விடலாம்.

அதாவது ஒருவர் குறிப்பிட்ட எண்ணுக்கு பணம் அனுப்பும்போது அந்த தொலைபேசி எண் பண மோசடியுடன் தொடர்புடையது என்றால் அதுதொடர்பாக ‛பாப்அப்' மெசேஜ் வரும். இதனை பார்த்து பொதுமக்கள் மோசடியில் சிக்காமல் தப்பிக்கலாம். இதில் செல்போன் எண்கள் 3 வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மீடியம் ரிஸ்க் நம்பர், ஹை மற்றும் வெரி ஹை ரிஸ்க் செல்போன் எண்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் மீடியம் ரிஸ்க் நம்பர் என்றால் ‛பாப்அப்' மெசேஜ் காட்டும். ஹை மற்றும் வெரி ஹை ரிஸ்க் செல்போன் எண்கள் என்றால் பணப்பரிவர்த்தனையே நடக்காது. இதனால் மக்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும்.

இந்த திட்டத்தில் நம் நாட்டில் அதிகமானவர்கள் பயன்படுத்தி வரும் கூகுள் பே எனும் ஜிபே நிறுவனம் இணையவில்லை. மத்திய அரசின் Fraud Risk Indicator (FRI)-யை ஜிபே ஒருங்கிணைப்பு செய்யவில்லை. இதனால் ஜிபே பயன்படுத்தும் நபர்களுக்கு மோசடி தொடர்பான அலர்ட் என்பது வராது. இதனால் தான் ஜிபே பயன்படுத்துவோரின் பணத்துக்கு ஆபத்து உள்ளது.

ஜிபே பயன்படுத்துவோருக்கு எந்தவித எச்சரிக்கையும் வராது என்பதால் அதனை பயன்படுத்துவோர் மோசடி நபர்களிடம் பணத்தை இழக்கும் நிலை உருவாக்கி உள்ளது. இதுபற்றி மத்திய தகவல் தொடர்பு துறையின் செயலாளர் நீரஜ் மிட்டல் கூறுகையில், ‛‛கூகுள் பே எனும் ஜிபே இன்னும் மத்திய அரசின் Fraud Risk Indicator-ல் இணையவில்லை'' என்று கூறியுள்ளார்.

நம் நாட்டில் யுபிஐ மூலமாக நடக்கும் பணப்பரிவர்த்தனையில் 30 முதல் 35 சதவீதம் வரை கூகுள்பே மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் கூகுள்பே தனது வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து காக்கும் வகையில் அலர்ட் செய்யும் Fraud Risk Indicator (FRI)-யை ஒருங்கிணைப்பு செய்யாமல் இருப்பது பலரின் பணப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+