Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று தொடர்ந்து பொய் சொல்வதா? - ப.சிதம்பரம் கண்டனம்

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று மத்திய அரசு தொடர்ந்து பொய் சொல்லி வருவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை என்று மத்திய அரசு தொடர்ந்து சொல்லி வருகிறது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் ஜெய்சங்கர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Government is maintaining the lie that there is no shortage of oxygen P. Chidambaram Tweets

நாடு முழுவதும் கொரோனா பரவல் தினசரியும் 4 லட்சம் பேராக அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. படுக்கை வசதி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டெல்லி, கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் கொத்துக்கொத்தாக உயிரிழக்கின்றனர்.

Government is maintaining the lie that there is no shortage of oxygen P. Chidambaram Tweets

செங்கல்பட்டு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. நாட்டில் அதிக அளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளை கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.

Government is maintaining the lie that there is no shortage of oxygen P. Chidambaram Tweets

நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை என்று மத்திய அரசு தொடர்ந்து பொய் சொல்லி வருகிறது. தினந்தோறும் நம் அண்டை வீட்டினர், அன்புக்குரியவர்கள் ஆக்சிஜன் சிலிண்டரை தேடும் நூற்றுக்கணக்கான மக்களின் நிறைய கதைகள் உள்ளன
என்று பதிவிட்டுள்ளார். எனக்கும் ஒரு கதை உள்ளது என் நண்பர்களுக்கும் பல கதைகள் உள்ளன என்றும் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் இளைஞரணி மே 1 அன்று ஒரு சிறந்த உண்மையான வாழ்க்கைக் கதையைக் கொண்டிருந்தது. சகிப்புத்தன்மையற்ற அமைச்சர் ஜெய்சங்கர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். அறிவார்ந்த அமைச்சர்கள் ஏன் பக்தர்களாக மாறுகிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+