சாலை விபத்தில் காயமடைவோருக்கு.. இனி தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை 2030ம் ஆண்டுகள் பாதியாகக் குறைக்க மத்திய அரசு இப்போது இலவச சிகிச்சை திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சாலை விபத்துகளில் காயமடைவோர் தனியார் மருத்துவமனைகளிலும் முதல் 7 நாட்களுக்கு ரூ.1.25 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மிகவும் விரிவான சாலை கட்டமைப்பைக் கொண்ட நாடு. நமது நாட்டின் கிட்டதட்ட அனைத்துப் பகுதிகளும் சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், நாடு முழுக்க முக்கியமான சாலைத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதேநேரம் மறுபுறம் இந்தியாவில் சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே 2030ம் ஆண்டுகள் சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி சாலை விபத்துகளில் காயமடைவோருக்கு இனி இலவச சிகிச்சை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயமடைவோருக்கு இலவசச் சிகிச்சை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதல் 7 நாட்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில் ரூ.1.50 லட்சம் வரை இலவசச் சிகிச்சை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள எந்தச் சாலையிலும் மோட்டார் வாகனம் தொடர்பான எந்தவொரு சாலை விபத்தில் பாதிக்கப்படும் நபரும் இதில் பலனடையலாம்.. அவரது வருமானம், பிரிவு உட்பட எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. சாலை விபத்தில் காயமடையும் எந்தவொரு நபரும் இந்த கேஷ்லெஸ் சிகிச்சை முறைக்குத் தகுதி பெறுவார்கள் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு இதேபோல ஒரு திட்டம் தொடங்கப்பட்டது. நம்மை காக்கும் 48 என்ற அந்தத் திட்டத்தில் முதல் 48 மணி நேரம் இலவச சிகிச்சை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே இப்போது மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்தில் ஒரு வாரம் வரை தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெறலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications