அவசர அவசரமாக டெல்லி போன ஆளுநர் ரவி.. ஏற்கனவே கேம்ப் போட்டு காத்திருக்கும் அண்ணாமலை! என்னமோ நடக்குது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ள நிலையில் ஆளுநர் ரவியும் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒரே நேரத்தில் இருவரும் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளது கேள்விகளை எழுப்பி உள்ளது. இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அண்ணாமலை சந்திக்க உள்ளார். இருவரும் தமிழக அரசியல் குறித்து பேச உள்ள நிலையில் ஆளுநர் ரவியின் பயணம் கவனம் பெற்றுள்ளது.

TTV Dinakaran Thirupparankundram bjp

அண்ணாமலை டெல்லி பயணம்

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, கோவையில் டிடிவி தினகரனை சந்தித்த சில மணி நேரங்களிலேயே அவசரமாக டெல்லி புறப்பட்டார். ஒரே வாரத்தில் இது அவரது இரண்டாவது டெல்லி பயணமாகும் என்பதால், தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவியது. முன்னதாக, மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து அண்ணாமலையும் அமித் ஷாவை சந்தித்துப் பேசியிருந்தார்.

கோவையில் நேற்று மாலை அண்ணாமலையின் இல்லத்தில் நடந்த சந்திப்பில் டிடிவி தினகரனுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர். சந்திப்பு முடிந்ததும், அண்ணாமலைக்கு டெல்லியிலிருந்து அவசர அழைப்பு வந்தது. அதையடுத்து, இரவு 9.30 மணிக்கு விமானம் மூலம் அவர் உடனடியாக டெல்லிக்குச் சென்றார்.

டெல்லியில் உள்ள பாஜக தேசியத் தலைமை

டெல்லியில் உள்ள பாஜக தேசியத் தலைமை, தமிழக பாஜக பிரிவு மீது அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தை மாநிலக் கட்சி முறையாகக் கையாளத் தவறியதே இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இவ்விவகாரம் தமிழக பாஜகவுக்குள் புதிய பதற்றத்தையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.

முன்னதாக, அ.தி.மு.க.வுடன் பாஜக கூட்டணி இல்லாதபோது தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை இருந்தார். பின்னர் கூட்டணி உருவானதும் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய மாநிலத் தலைவரானார். தற்போது அண்ணாமலை மீண்டும் தலைமைப் பதவியைப் பெற முயல்வதாகவும், திருப்பரங்குன்றம் சம்பவத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் திட்டமிடுவதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, பாஜக சென்னை அலுவலகத்தில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய அண்ணாமலை, திருப்பரங்குன்றம் மலை முழுவதும் இந்துக்களுக்கே சொந்தமானது எனக் கூறினார். சிக்கந்தர் தர்கா, நெல்லித்தோப்பு, மற்றும் தர்காவுக்குச் செல்லும் பாதை ஆகிய மூன்று இடங்கள் மட்டுமே தர்கா நிர்வாகத்திற்கு உரியவை என்றார். அமைச்சர் ரகுபதி 2014, 2017 ஆம் ஆண்டுகளில் வெளியான நீதிமன்றத் தீர்ப்புகளைத் திரித்து, உண்மைக்கு மாறாகப் பேசுவதாகவும் அவர் கடுமையாகக் குற்றம்சாட்டினார்.

அண்ணாமலை தந்த புகார்

தர்காவிலிருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ராம ரவிக்குமார் என்பவர் அக்டோபர் 1ஆம் தேதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையை நாட, நீதிமன்றமும் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி அளித்துத் தீர்ப்பளித்தது. நியாயப்படி பார்த்தால், ஆட்சேபனை இருந்தால் தர்கா நிர்வாகமே அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருக்க வேண்டும் என அண்ணாமலை குறிப்பிட்டார்.

"தர்காவுக்கு பக்கத்தில் இருக்கும் தூணில் விளக்கேற்றினால் எங்கள் மனம் புண்படும்" என அவர்கள்தான் தீபத் தூணில் தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும் என்றார் அண்ணாமலை. ஆனால், கோயில் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டிய கோயில் செயல் அலுவலர், திமுக அரசின் அழுத்தத்தினால்தான் மேல்முறையீடு செய்தார் என்றும் அவர் சாடினார்.

திமுக அரசு 'சிக்கந்தர் மலை' எனப் பெயரிட்டு ரசித்தது எனவும் அண்ணாமலை விமர்சித்தார். "சிக்கந்தர் மலை எனப் பெயரிட்டதால் ராமநாதபுரம் எம்.பி. அங்கு போய் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது இந்த திமுக அரசும், கோயில் செயல் அலுவலரும் எங்கே போயிருந்தார்கள்?" என்றும் அண்ணாமலை தனது பேட்டியின்போது சவால் விடுத்துக் கேள்வி எழுப்பினார்.

அண்ணாமலை நீண்ட நாட்களுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்ததற்கு, அமித் ஷா கொடுத்த 'பச்சைக்கொடி'யே காரணம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலைக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்க டெல்லி தலைமை முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நயினார் நாகேந்திரன் பெரிய போராட்டத்துக்குத் தலைமை தாங்கி, கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால், பாஜக மாநில அளவில் தனது பலத்தை வெளிப்படுத்தியிருக்கும் என அண்ணாமலை ஆதரவாளர்கள் வாதிட்டனர்.

திருப்பரங்குன்றம் குழப்பம்

பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கக் கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பை கட்சி இழந்ததாகவும், இந்தத் தாமதமும் குழப்பமும் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தின என அவர்கள் குறிப்பிட்டனர். ராம ரவிக்குமார் குழுவும் இதே விமர்சனத்தை முன்வைத்தது. அண்ணாமலை அமித் ஷாவிடம் பேசிய சில விஷயங்களே இதற்கு காரணம் என்கிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை விரிவான அறிக்கையை அமித் ஷாவிடம் சமர்ப்பித்தார் எனக் கூறப்படுகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தை பலவீனமாக கையாண்டது, குறிப்பாக தேர்தல் நெருங்கும் சமயத்தில், தமிழக பாஜகவின் இமேஜுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. இக்காரணத்தாலேயே அமித் ஷா, அண்ணாமலையை அவசரமாக டெல்லிக்கு அழைத்து விவாதித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பில் இருந்தபோதும், அண்ணாமலையின் இந்தத் திடீர் டெல்லி பயணம் தமிழக பாஜக தொண்டர்களிடையே குழப்பத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மத்தியத் தலைமை அண்ணாமலையின் கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொண்டதன் தெளிவான அறிகுறியாகவே இது பார்க்கப்படுகிறது.

டெல்லியிலிருந்து திரும்பிய அண்ணாமலை, சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதே நிகழ்வில் முன்னாள் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் தோன்றினார். இது கட்சியில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய முக்கிய மாற்றங்களுக்கான ஆரம்ப அறிகுறிகள் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+