பெட்ரோல், டீசல் விலை குறையப் போகுது.. வரப்போகும் குட் நியூஸ்? தீவிர ஆலோசனையில் மத்திய அரசு.. ஆஹா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி உள்ளது. சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் உள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு தற்போது கச்சா எண்ணய் விலை சரிவை சந்தித்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டது. லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

petrol diesel price delhi

அதன்பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து சரிந்து வந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், டீசல் ஒரு லிட்டர் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை தொடர்ச்சியாக சரிந்து வந்தாலும் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்காமல் இருந்து வருவதால் வாகன ஓட்டிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் தான், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு கணிசமான லாபம் கிடைத்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் உயர்ந்துள்ளதால், நுகர்வோர்களும் லாபம் அடையும் வகையில் விலை குறைப்பை அமல்படுத்துவது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

விரைவில் ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிராவிலும் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, இந்த தேர்தலுக்கு முன்பாக மக்களுக்கு கொஞ்சம் நிவாரணம் அளிக்கும் விதமாக விலை குறைப்பை கொண்டு வரலாம் என அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எண்ணெய் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படமால் இந்த விலைக்குறைப்பை கொண்டு வருவது தொடர்பாக துறை சார்ந்த இரு அமைச்சகங்களுக்கு இடையே ஆலோசனை நடைபெறுகிறதாம்..

சர்வதேச சந்தையில் அமெரிக்க கச்சா எண்ணெய் விலை1 சதவிகிதம் குறைந்து பேரல் ஒன்றின் விலை 70 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலையும் குறைந்துள்ளது. ஒரு டாலர் குறைந்து பேரல் ஒன்று 72.75 டாலராக உள்ளது. தற்போது விலை சரிவை சந்தித்து இருப்பதால் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் பெட்ரோலிய உற்பத்தியை அதிகரிப்பதை தாமதிக்கலாம் என்று தெரிகிறது.

அடுத்த மாதம் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இந்த நாடுகள் திட்டமிட்டு இருந்தன. லிபியா நாட்டின் எண்ணெய் சர்வதேச சந்தையில் சந்தைக்கு வந்துள்ளதால் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைவை சந்தித்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+