Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிக்னல் ஜாமிங்.. சென்னை உட்பட நாட்டின் முக்கிய விமான நிலையங்கள் பாதிப்பு! - மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னை, டெல்லி என நாட்டின் மிக முக்கியமான விமான நிலையங்கள் ஜிஎன்எஸ்எஸ் ஜாமிங் பிரச்சனையால் பாதிப்பை எதிர்கொண்டது என்றும், இதனால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது என்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

சென்னை மட்டுமல்லாது கொல்கத்தா, அமிர்தசரஸ், மும்பை, ஹைதராபாத், பெங்களூர், டெல்லி போன்ற நகரங்களிலும் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.

GPS GNSS flight

இது குறித்து நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது, "இந்த பிரச்சனையை சரி செய்ய சில ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் முக்கிய ஒழுங்குமுறை நடவடிக்கை பின்பற்றப்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, ஜிஎன்எஸ்எஸ் ஜாமிங்க் மற்றும் ஜிபிஎஸ் ஸ்பூஃபிங் தொடர்பான விஷயங்களை புகாராக பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

எனவே இது தொடர்பாக நாட்டின் முக்கிய விமான நிலையங்களிலிருந்தும் அறிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன. ஜிஎன்எஸ்எஸ் குறுக்கீடு டெல்லி வான்பகுதியில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம். இப்படியான நேரங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்தியா பாரம்பரிய தரை அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புகளை உள்ளடக்கிய குறைந்தபட்ச இயக்க வலையமைப்பை தொடர்ந்து இயக்குகிறது" என்று கூறியுள்ளார்.

ஜிஎன்எஸ்எஸ் ஜாமிங் என்றால் என்ன?

வானத்தில் விமானம் பறந்துக்கொண்டுக்கும்போது அது எவ்வளவு உயரத்தில் பறக்கிறது? எந்த திசையில் பறந்துக்கொண்டிருக்கிறது என்பதை கண்டறிய உலகம் முழுவதும் 4 வகையான தொழில்நுட்ப வசதிகள் பயன்படுத்தப்படுகின்றன. செயற்கைக்கோளிலிருந்து வரும் அலைகள் விமானங்களை ஊடுருவுவதன் மூலம், விமானத்தின் நிலையை தெரிந்துக்கொள்ள முடியும்.

  • அமெரிக்கா - GPS
  • ரஷ்யா - GLONASS
  • ஐரோப்பிய நாடுகள் - Galileo
  • சீனா - BeiDou

இந்த 4 செயற்கைக்கோள் அமைப்புகளும் இணைந்ததுதான் GNSS என அழைக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து ஒரு விமானம் புறப்படுகிறது எனில், அது அமெரிக்காவின் GPS மற்றும் ரஷ்யாவின் GLONASS அமைப்பை நம்பியிருக்கிறது. இருப்பினும் நம்முடைய விமானங்களால் Galileo மற்றும் BeiDou வை கூட பயன்படுத்த முடியும். இப்படி உலகம் முழுவதும் அனைத்து விமானங்களும் பாதுகாப்புக்காக GNSS-ஐ நம்பியிருக்கின்றன.

பிரச்சனை என்னவெனில் இதில் சில இடையூறுகள் சமீப காலமாக ஏற்பட்டு வருகின்றன. இது ஏன் ஏற்படுகிறது என்பது இன்னும் தெரியவில்லை. சக்தி வாய்ந்த ரேடியோ சிக்னல்களை அனுப்பும்போது, GNSS செயற்கைக்கோள்கள் அனுப்பும் சிக்னல்கள் தடை செய்யப்படலாம். எனவே இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜிபிஎஸ் ஸ்பூஃபிங் என்றால் என்ன?

ஒரு விமானம் தரையிலிருந்து 30,000 அடி உயரத்தில், கிழக்கு நோக்கி பறந்து கொண்டிருக்கிறது எனில், விமானம் 20,000 உயரத்தில், தென்கிழக்கு நோக்கி பறந்து கொண்டிருக்கிறது என்று தவறான தகவல்கள் விமானத்தின் வழிகாட்டும் அமைப்பில் காட்டப்படும். இப்படி தவறான தகவல்களை காட்டுவதைதான் ஜிபிஎஸ் ஸ்பூஃபிங் என்று சொல்கிறார்கள். இந்த இரண்டு தொழில்நுட்ப பிரச்சனைகளாலும் நிச்சயம் விபத்துகள் ஏற்படும். இந்த பிரச்சனையைதான் சென்னை, டெல்லி போன்ற விமான நிலையங்கள் எதிர் கொண்டிருக்கின்றன என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+